78தொல்காப்பியம்[விளிமரபு]

78

எ - டு. அவையாவன:--ஆடூஉ, மகடூஉ, நீ என்பன.

(6)

இகர ஈற்று அளபெடைப் பெயர் விளியேற்குமாறு

121.அளபெடை மிகூஉம் இகர இறுபெயர்
இயற்கைய வாகுஞ் செயற்கைய வென்ப.

இகர ஈற்றுக்கண் வருவதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். அளபெடை மிக்க இகர ஈற்றுப் பெயர் இயற்கையவாகிய செய்தியை யுடைய, எ - று.

எ - டு. தோழீஇ என்பது விளிக்கண்ணும் அவ்வாறே வரும். செயற்கை என்றதனான் விளிக்கண் வரும் ஓசை வேறுபாடு அறிந்து கொள்க.

(7)

முறைப் பெயரில் ‘ஐ’ ஈறு விளியேற்குமாறு

122.முறைப்பெயர் மருங்கின் ஐயெ னிறுதி
ஆவொடு வருதற் குரியவும் உளவே.

ஐகார வீற்று முறைப் பெயர்க்கண் வரும் வேறுபாடு
உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். முறைப் பெயர்க்கண் வரும் ஐகார ஈறு, ஆய் ஆகி வருதலன்றி, ஆ வோடு வருவதற்கு உரிய பெயரும் உள, எ - று.

எ - டு. அன்னை என்பது அன்னாய் என வருதலேயன்றி, அன்னா எனவும் வரும். உம்மை இறந்தது தழீஇயிற்று.

(8)

அண்மை விளி இயல்பாதல்

123.அண்மைச் சொல்லே யியற்கை யாகும்.

இருதிணைக்கண்ணும் வரும் எல்லாவீற்றுப் பெயரும் அண்மைக் கண் விளி ஏற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இச்சூத்திரம் முன்னும் பின்னும் நோக்கி நிற்றலிற் சிங்க நோக்காகிக் கிடந்ததென்று கொள்க.

இ - ள். மேற் சொல்லப்பட்ட உயிரீற்றுப் பெயரும், இனி யோதுகின்ற புள்ளியீற்றுப் பெயரும் அஃறிணைப் பெயரும் அண்மைக்கண் இயல்பாகி விளியேற்கும். னகர ஈறு சிறப்பு விதி பெறுதலின், அஃதொழிந்த ஏனைய கொள்ளப்படும், எ - று.

எ - டு. நம்பிவாழி; நங்கைவாழி; வேந்துவாழி; கோவாழி; மாதர் கூறு; அண்ணல் கூறு; கடவுள்வாழி; தும்பி கூறு; அன்னங் கூறு; கானல் கூறு எனவரும். பிறவும் அன்ன. ஆவுமானியற் பார்ப்பனமாக்களும் என்பதும் அண்மை விளி. பிறவும் அன்ன.

(9)