80தொல்காப்பியம்[விளிமரபு]

80

அன் என்பது அதிகாரத்தான் வந்தது.

எ - டு. சோழ, சாத்த, வெற்ப என வரும்.

(13)

ஆன் ஈறு இயல்பாதல்

128.ஆனெ னிறுதி யியற்கை யாகும்.

இதுவும் னகர வீற்றுக்கண் வருவதோர் வேறுபாடு
உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். உயர்திணைப் பொருள் உணர்த்தும் னகார வீற்றுப் பெயருள் ஆன் என்னும் ஈற்றுப் பெயர் இயல்பாகி விளியேற்கும்,
எ - று.

எ - டு. சேரமான், மலையமான் என்பன விளிக்கண்ணும் அவ்வாறே வரும்.

(14)

ஆன் என்றும் வினையாலணையும் பெயர் விளி ஏற்குமாறு

129.தொழிலிற் கூறும் ஆனென் இறுதி
ஆயா கும்மே விளிவயி னான.

ஆனீற்றுப் பெயர்க்கண் வருவதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். தொழிலாற் கூறப்படும் ஆன் ஈற்றுப் பெயர் ஆய் என வரும் விளித்தற் கண்ணும், எ - று.

எ - டு. உண்டான், வந்தான் என்னுந் தொழிற்பெயர் உண்டாய், வந்தாய் என விளியேற்கும், தொழில் என்றதனாற் குறிப்பு வினைப் பெயருங் கொள்க. உடையான், கழலான் என்பன உடையாய், கழலாய் என வரும்.

ஈண்டு விளிவயினான என விதந்தோதினமையால், தொழிலால் வருஞ் சொல் முன்னிலை வினையாகிய வழியும் உண்டாய் எனவரும்: அஃதன்று இது என்பதூஉம், அதனோடு இதனிடை ஓசை வேறுபாடு உளது என்பதூஉம் அறிவித்தற்கு எனக் கொள்க.

(15)

ஆன்ஈற்றுப் பண்புப் பெயர் விளி ஏற்குமாறு

130.பண்புகொள் பெயரும் அதனோ ரற்றே.

ஆனீற்றுப் பெயருள் பண்புப் பெயர்க்கு உரியதோர் இயல்பு
உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். பண்பினால் பெற்ற ஆன் ஈற்றுப் பெயரும் ஆய் என விளி ஏற்கும், எ - று.

எ - டு. கரியான், கொடியான் என்பன கரியாய், கொடியாய் என வரும். கரியான் எனவும் விளியேற்குமாலெனின், அவ்வாறு வருவது பண்பு குறியாது அப்பொருட்கு இடுகுறியாகி வந்தது என்க.

(16)