[விளிமரபு]சொல்லதிகாரம் தெய்வச்சிலையார்81

81

ஆன்ஈற்று அளபெடைப்பெயர் விளி ஏற்குமாறு

131.

அளபெடைப் பெயரே அளபெடை யியல.

னகர ஈற்று அளபெடைப்பெயர் விளி ஏற்குமாறு
உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். னகார இறுதி அளபெடைப் பெயராயின் 1மேற்சொல்லப்பட்ட அளபெடைப் பெயர் போல இயல்பாகி விளி ஏற்கும், எ - று.

எ - டு. கிழாஅன், கோஒன் என்பன விளிக்கண்ணும் அவ்வாறே வரும்.

(17)

னகர ஈற்று முறைப்பெயர் விளி ஏற்குமாறு

132.

முறைப்பெயர்க் கிளவி ஏயொடு வருமே.

னகார ஈற்றுள் முறைப்பெயர் விளி ஏற்குமாறு
உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். னகார ஈற்றுள் முறைமை குறித்த பெயர் ஏகாரத்தோடு விளி ஏற்கும், எ - று.

எ - டு. மகன் என்பது மகனே என வரும்.

ஒப்பின் முடித்தல் என்பதனான் முறைமை சுட்டாத மகன் என்னும் பெயரும் ஏவொடு சிவணும் என்று கொள்க. 2பார்ப்பன மகனே, பார்ப்பன மகனே” என வரும். 3சான்றாள ரீன்ற தகாஅத் தகாஅ மகாஅ-ஈன்றாட் கொருபெண் இவள் என ஆகாரமாகியும் வரும். வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதனால் பிற பெயர்க்கண்ணும் ஏவொடு வருதல் கொள்ளப்படும்.

4கூந்தன்மா வூர்ந்து குடமாடிக் கோவலனாய்ப்
பூந்தொடியைப் புல்லியஞான் றுண்டால்--யாங்கொளித்தாய்
தென்னவனே தேர்வேந்தே தேறுநீர்க் கூடலார்
மன்னவனே மார்பின் மறு.

எனவும், கோன் என்பது கோனே எனவும் வரும்.

இவை செய்யுள் மருங்கினும் என்னும் அதிகாரப் புறனடையாற் கொள்ளினும் அமையும்.

(18)

னகர ஈற்றுள் விளி ஏலாதன

133.

தானென் பெயரும் சுட்டுமுதற் பெயரும்
யானென் பெயரும் வினாவின் பெயரும்
அன்றி யனைத்தும் விளிகோ ளிலவே.


1. 121ஆம் நூற்பா.

2. குறுந். 156.

3. பரி. 8-ஆம் பாடல்.

4. முத்தொள்ளாயிரம்.