82தொல்காப்பியம்[விளிமரபு]

82

னகார ஈற்றுப் பெயருள் விளி ஏலாதன உணர்த்துதல்
நுதலிற்று.

இ - ள். தான்; அவன், இவன், உவன்; அத்தன்மையன் அத்தன்மையான்; அன்னான், அனையான்; யான், யாவன் என வருவன விளி ஏலா; எ - று.

(19)

ரகர ஈற்றுப் பெயர் விளி ஏற்குமாறு

134.ஆரும் அருவும் ஈரொடு சிவணும்.

நிறுத்த முறையானே உயர்திணைக்கண் ரகரவீற்றுப்பெயர் விளி ஏற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். ஆர், அர் என்னும் ஈற்றுப் பெயர்கள் ஈர் என்பதனோடு சிவணும், எ - று.

எ - டு. பார்ப்பார், கூத்தர், உடையர் என்பன பார்ப்பீர் கூத்தீர், உடையீர் என வரும். வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதனால் பெண்டிர், பெண்டீர் எனவும் வரும்.

(20)

ரகர ஈற்று வினையாலணையும் பெயர் விளி ஏற்குமாறு

135.தொழிற்பெய ராயின் ஏகாரம் வருதலும்
வழுக்கின் றென்மனார் வயங்கி யோரே.

இ - ள். மேற் சொல்லப்பட்ட ஈறுகள் தொழிற் பெயராயின் ஏகாரம் வருதலும் குற்றமில்லை என்பார் அறிந்தோர். எ - று.

உம்மை இறந்தது தழீஇயிற்று.

எ - டு. வந்தார், வந்தவர் என்பன வந்தீர் என வருதலேயன்றி, வந்தாரே, வந்தவரே எனவும் வரும்.

ஈரோடு சிவணும் என்றோதி, ஏகாரம் வருதலுங் குற்றமில்லை என்ற தனான் அதனோடு அடுத்து வருதலும் கொள்க. வந்தீரே எனவும் வரும்.

(21)

ரகர ஈற்றுப் பண்பு கொள் பெயர் விளி ஏற்குமாறு

136.பண்புகொள் பெயரும் அதனோ ரற்றே.

ரகார ஈற்றுப் பண்புகொள் பெயர் விளி ஏற்குமாறு
உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். ரகார ஈற்றுப் பண்பினான் வரும் பெயரும் தொழிற்பெயர் போல விளி ஏற்கும், எ - று.

எ - டு. கரியார், கரியவர் என்பன கரியீர் என வருதலேயன்றிக் கரியாரே, கரியவரே, கரியீரே எனவும் வரும்.

(22)