[விளிமரபு]சொல்லதிகாரம் தெய்வச்சிலையார்83

83

ரகர ஈற்று அளபெடைப் பெயர் விளி ஏற்குமாறு

137.

அளபெடைப் பெயரே அளபெடை யியல.

ரகார ஈற்றுள் அளபெடைப் பெயர் விளி ஏற்குமாறு
உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். ரகார ஈற்றுள் அளபெடைப் பெயர்1 மேற்சொல்லப்பட்ட அளபெடைப் பெயரே போல இயல்பாகி விளி யேற்கும், எ - று. 

எ - டு. மகாஅர், சிறாஅர் என்பன விளிக்கண்ணும் அவ்வாறே வரும். 

(23)

ரகர ஈற்றுள் விளி ஏலாதன

138.

சுட்டுமுதற் பெயரே முற்கிளந் தன்ன.

ரகார ஈற்றுள் விளி ஏலாதன உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்.சுட்டு முதலாகிய ரகரவீற்றுப் பெயர்2 மேற் சொல்லப்பட்ட சுட்டு முதற் பெயர் போல விளி ஏலா, எ - று.

எ - டு. அவர், இவர், உவர், அத்தன்மையர், அத்தன்மையார் என்பன விளி ஏலா. 

(24)

இதுவுமது

129.

நும்மின் திரிபெயர் வினாவின் பெயரென்
றம்முறை இரண்டும் அவற்றியல் பினவே.

இதுவும் அது

இ - ள். நும்மின் திரிபெயராவது நீயிர். வினாவின் பெயராவது வினாவானாகிய பெயர். அது யார், யாவர் என்பது. அம் முறையாகிய இரண்டு பெயரும் விளியேலா எ - று.

இவ் வீற்றினுள் முறைப் பெயர் கூறாதது என்னையெனின், அது பொது விதியான் அடங்குதலின் என்க. 

(25)

லகர, ளகர ஈற்றுப் பெயர்கள் விளி ஏற்குமாறு

140.

எஞ்சிய இரண்டின் இறுதிப் பெயரே
நின்ற ஈற்றயல் நீட்டம் வேண்டும்.

லகார ளகார ஈற்றுப் பெயர் விளி ஏற்குமாறு உணர்த்துதல்
நுதலிற்று.

இ - ள். லகார, ளகார ஈற்றுப் பெயர் விளி ஏற்புழி ஈற்றயல் நீட்டம் கொடுத்தல் வேண்டும், எ - று.


1. 121 ஆம் நூற்பா.

2. 133 ஆம் நூற்பா.