எ - டு. குருசில், தோன்றல், மக்கள் என்பன, குருசீல், தோன்றால், மக்காள் எனவரும். (26) இதுவுமது 141. | அயல்நெடி தாயின் இயற்கை யாகும். |
இ - ள். லகார, ளகார ஈற்றுப் பெயர் விளி ஏற்புழி ஈற்றயல் நெடிதாயின் இயல்பாகி விளி ஏற்கும், எ - று. எ - டு. பெண்பால், கோமாள் என்பன விளிக்கண்ணும் அவ்வாறே வரும். (27) ளகார ஈற்றுத் தொழிற் பெயரும் பண்பு கொள் பெயரும் ‘ஆய்’ ஆதல் 142. | வினையினும் பண்பினும் நினையத் தோன்றும் ஆளென் இறுதி ஆயா கும்மே விளிவயி னான. |
ளகார ஈற்றுள் ஒருசாரன விளி ஏற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். தொழிற்பெயர்க்கண்ணும் பண்புப் பெயர்க் கண்ணும் வரும் ஆள் என் இறுதி ஆய் ஆகும் விளித்தற்கண், எ - று. பெயரென்பது அதிகாரத்தான் வந்தது. ஈண்டு விளி வயினான் என்பதற்கு மேல் உரைத்தவாறே உரைக்க. எ - டு. உண்டாள், கரியாள் என்பன உண்டாய், கரியாய் எனவரும். (28) ளகார ஈற்று முறைப் பெயர் விளி ஏற்குமாறு 143. | முறைப்பெயர்க் கிளவி முறைப்பெய ரியல. |
ளகார வீற்றுள் முறைப்பெயர் விளி ஏற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். ளகார ஈற்று முறைப் பெயர்ச்சொல்1 னகார ஈற்று முறைப் பெயர் போல விளி ஏற்கும், எ - று. எ - டு. மகள், மகளே எனவரும். ஒப்பின் முடித்தல் என்பதனால் முறைமை சுட்டாத மகள் என்பதும் ஏகாரம் பெற்று விளிஏற்கும். 2அகவன் மகளே அகவன் மகளே என வரும். (29) ளகார ஈற்றுள் விளி ஏலாதன 144. | சுட்டுமுதற் பெயரும் வினாவின் பெயரும் முற்கிளந் தன்ன என்மனார் புலவர். |
1. 132. ஆம் நூற்பா. 2. குறு. 23.
|