[விளிமரபு]சொல்லதிகாரம் தெய்வச்சிலையார்85

85

ளகர வீற்றுப் பெயருள் விளி ஏலாதன உணர்த்துதல்
நுதலிற்று.

இ - ள். சுட்டெழுத்தை முதலாக உடைய பெயரும், வினாவானாகிய பெயரும்1 மேற்சொல்லியவாறு போல் விளி ஏலா, எ - று.

எ - டு. அவள், இவள் உவள், அத்தன்மையள், அத்தன்மையாள்; யாவள் என்பன விளி ஏலா என்றவாறு. 

(30)

லகார, ளகார ஈற்று அளபெடைப் பெயர் விளி ஏற்குமாறு

145.

அளபெடைப் பெயரே அளபெடை யியல.

லகார ளகார ஈறுகள் அளபெடைக்கண் விளி ஏற்குமாறு
உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். லகார, ளகார ஈற்று அளபெடைப்பெயர் 2மேற் சொல்லப்பட்ட அளபெடைப் பெயர் போல இயல்பாகும். எ - று.

எ - டு. வலம்புரித் தடக்கை மாஅல்: மேவார்த் தொலைத்த விறன்மிகு வேஎள் என வரும்

(31)

அஃறிணை விரவுப் பெயர் விளி ஏற்குமாறு

146.

கிளந்த இறுதி அஃறிணை விரவுப்பெயர்
விளம்பிய நெறிய விளிக்குங் காலை.

அஃறிணைப் பொருள் உணரவரும் விரவுப் பெயர் விளி
ஏற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். மேற் சொல்லப்பட்ட ஈற்றினை யுடையவாகிய அஃறிணைப் பொருண்மேல் வரும் விரவுப் பெயர் சொல்லப்பட்ட நெறியவாம் விளிக்குங் காலத்து, எ - று.

எ - டு. சாத்தன், சாத்தா; சாத்தி, சாத்தீ; குருடன், குருடா; குருடி, குருடீ எனவரும். பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க. 

(32)

அஃறிணைப் பெயர் விளி ஏற்குமாறு

147.

புள்ளியும் உயிரும் இறுதி யாகிய
அஃறிணை மருங்கின் எல்லாப் பெயரும்
விளிநிலை பெறூஉங் காலந் தோன்றின்
தெளிநிலை யுடைய ஏகாரம் வரலே.


1. 133 ஆம் நூற்பா.

2. 121 ஆம் நூற்பா.