வேனிலான் எனக் காலம்பற்றி வரும் பெயரும், பிறன், பிறள், பிறர் நுமன், நுமள், நுமர், தமன், தமள், தமர் என்பனவும் பிறவும் உயர்திணைப் பொருட்கே உரியவாகி வரும் பெயரெல்லாம் இதுவே ஓத்தாகக் கொள்க. (12) அஃறிணைப் பெயர்கள் 163. | அதுஇது உதுவென வரூஉம் பெயரும் அவைமுத லாகிய ஆய்தப் பெயரும் அவைஇவை உவையென வரூஉம் பெயரும் அவைமுத லாகிய வகரப் பெயரும் யாதுயா யாவை என்னும் பெயரும் ஆவயின் மூன்றோ டப்பதி னைந்தும் பாலறி வந்த அஃறிணைப் பெயரே. |
நிறுத்த முறையானே அஃறிணைப் பெயராமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். அது முதலாக ஓதப்பட்ட பதினைந்து பெயரும் பாலறிய வந்த அஃறிணைப் பெயராம், எ - று. எ - டு. அது, இது, உது; அஃது, இஃது, உஃது; அவை, இவை, உவை; அவ், இவ், உவ்; யாது, யா, யாவை என வரும். (13) இதுவும் அது 164. | 1பல்ல பலசில என்னும் பெயரும் உள்ள இல்ல என்னும் பெயரும் வினைப்பெயர்க் கிளவியும் பண்புகொள் பெயரும் இனைத்தெனக் கிளக்கும் எண்ணுக்குறிப் பெயரோடு ஒப்பி னாகிய பெயர்நிலை உளப்பட அப்பால் ஒன்பதும் அவற்றோ ரன்ன. |
இதுவும் அது. பல்ல, பல, சில என்னும் பெயராவன பல்ல, பல, சில என்பன. உள்ள, இல்ல என்னும் பெயராவன உள்ள, இல்ல என்பன. வினைப் பெயர்க் கிளவியாவது வினையானாகும் பெயர். வந்தது, உழுதது என்பன வினையினாற் பொருட்குப் பெயராகி வந்தன. பண்பு கொள் பெயராவது பண்பினைக் கொண்ட பெயர். கரியது, காரி, வெள்ளை எனப் பண்பினைக் கொண்ட பொருட்குப் பெயராயின. இனைத்து எனக் கிளக்கும் எண்ணுக் குறிப் பெயராவது இத்துணை என வரையறுத்து. உணர்த்தும் எண்ணுக் குறிப் பெயராம். அவை
1. இதன் பொருள் காணப்பட்டிலது.
|