ஆராய்ச்சி முன்னுரை13

13

அற்றேல் அவ் விருவர்க்கும் பிற்பட்டவர் இவர் எனில், இவர்தம் உரையில் அவர்கள் பெயர்கள் குறிக்கப்பட்டிருக்கலாமன்றோ? அங்ஙனம் குறிக்காமைக்குக் காரணம் என்னை யெனில், பெயர் கூறி மறுக்கும் பழக்கம் இவரிடம் இல்லையாதலேயன்றிப் பிறிதில்லை யென்க. அன்றியும் இவர் பிறர் கருத்தாகக் கூறி மறுக்கும் இடங்கள் ஏழேயாகும். அவற்றுள் ஈரிடங்கள் இளம்பூரணரையும், மூவிடங்கள் சேனாவரையர் நச்சினார்க்கினியரையும் மறுக்கும் இடங்களாகக் கூறலாம். எனினும், அவ்விடங்களிலெல்லாம் அவ்வவர் பெயர்களை வெளிப்படையாகக் கூறி மறுக்காமையும் ஈண்டு நினைவு கூர்தற்குரியதாகும். ஆதலின் அவ்விருவர் காலத்திற்கும் இவர் சிறிது பிற்பட்டவர் எனத் துணியலாம்.

இனிக், கி. பி. 13 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கொங்கு நாட்டில் அரசப் பிரதிநிதியாயிருந்த சடையவர்மன் சுந்தர பாண்டியனது ஆட்சியின் 3 ஆம் ஆண்டுக் கல்வெட்டொன்று (கி. பி. 1280) திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள திருமழபாடியிலுள்ளது (31 of 1920). அதில் “அரையன் தெய்வச்சிலையார் ஆன எடுத்த கை அழகியான்” என்று ஒருவர் குறிப்பிடப்பட்டுள்ளார். அவர் பாண்டிமண்டலத்துக் காவூர்க் கூற்றத்து வளமர் ஆன வேம்ப நல்லூர் என்னும் ஊரினர்.

கி. பி. 14 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் சடையவர்மன் வீரபாண்டியனின் 30 ஆம் ஆண்டுக் கல்வெட்டொன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மன்னார்கோயிலில் உள்ளது (391 of 1916). இதன் காலம் கி. பி. 1326 ஆகும். இதில் “இளையாழ்வார் தெய்வச்சிலைப் பெருமாள் ஆன விக்கிர பாண்டிய காலிங்கராயர்” என்று ஒருவர் குறிப்பிடப்பெறுகிறார். இவற்றால் தெய்வச்சிலையார் என்ற பெயர் வழக்குண்மை 13 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 14 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இருந்தது என்பது பெறப்படுகிறது.

எனவே, இவர் காலம் கி. பி. 14 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாக இருக்கலாம் எனத் துணிதலில் இழுக்கில்லை என்க.

மேற்கூறிய இரு கல்வெட்டுக்களிலும், தெய்வச்சிலையார் என்ற பெயருடையார் பாண்டிமண்டலத்தில் இருந்தவராகத் தெரிதலின் இவரும் பாண்டிமண்டலத்தவரோ என ஊகிக்க இடனுண்டு.

3. இலக்கியப் புலமை

இவர் தம் இலக்கியப் புலமை மிக விரிந்ததும், நுணுகியதும் ஆகும். இவரது உரையிலிருந்து இவருக்கு எட்டுத்தொகை,