இதுவும் அது 191. | திணையொடு பழகிய பெயரலங் கடையே. |
எய்தியது ஒருமருங்கு விலக்குதல் நுதலிற்று இ - ள். மேல் உயர்திணையைச் சுட்டா என ஓதப்பட்டன அவ்வாறு வருதல், உயர்திணையோடு பழகிப் போந்த பெயர் அல்லாத இடத்து, எ - று. எனவே பழகிப்போந்த பெயர் இருதிணைக்கும் பொதுவாகி நிற்கும் என்று கொள்க. அவையாவன: யானை, சிங்கம், அன்னம், மயில், மாலை என இவ்வாறு வருவன. (41) பெயரியல் முற்றும்.
|