1அரு என்புழி வந்த உகரம் செய்யுள் விகாரம் என்பதும் ஒன்று. ஒற்றீறாகி வரும் சொற்கள் உகரம் பெற்று வழங்கப் பெறும் என்பது அறிவித்தற்கு, உடம்பொடு புணர்த்துக் கூறினார் என்பதும் ஒன்று. எ - டு. உண்டனர், உண்ணாநின்றனர், உண்பர்; உண்டார், உண்ணாநின்றார், உண்பார்; உண்ணார்; உண்ப என வரும். (9) இதுவும் அது 201. | மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை காலக் கிளவியொடு முடியும் என்ப. |
மேலதற்கு ஓர் புறநடை உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். மார் ஈற்று வினைச்சொல்லும் பல்லோரை உணர்த்தும் படர்க்கைச் சொல்லாம். அது பெயரோடு முடிதலேயன்றி, வினையோடும் முடியும் என்று சொல்லுவார், எ - று. எ - டு. ஆ கொண்மார் வந்தார். இது வினையோடு முடிந்தது. 2பாடில் மன்னரைப் பாடன்மார் எமரே-இது பெயரோடு முடிந்தது. இதனையும், செய்கு என்பதனையும் வினையெச்சம் என்றதனாற் குற்றம் என்னை எனின். வினை எச்சம் பால் தோன்றாது: இவை பால் தோன்றலின், முற்று எனல் வேண்டும். (10) உயர்திணை வினைமுற்றின் தொகை 202. | பன்மையும் ஒருமையும் பாலறி வந்த அந்நா லைந்தும் மூன்றுதலை யிட்ட முன்னுறக் கிளந்த உயர்திணை யவ்வே. |
விரிந்தது தொகுத்தலை உணர்த்துதல் நுதலிற்று. மேல், உயர்திணை என்று ஓதாமையான், எஞ்சியது உணர்த்திற்று என்றுமாம். இ - ள். பன்மையும் ஒருமையுமாகிப் பாலுணர வரும் மூன்று தலையிட்ட இருபதும் முந்துற எடுத்து ஓதப்பட்ட உயர்திணை இடத்த, எ - று. பெயரெச்சம் மொழி மாறிநின்றது. இவ்வாறு மாறிவருவன உடம்பொடு புணர்த்ததனானும் கொள்க. மேல் ஓதப்பட்ட ஈறுகள் உயர்திணை என்பது இச்சூத்திரத்தாற் பெறப்பட்டது. அவை இருபத்துமூன்றுமாவன:--அம், ஆம், எம், ஏம், கும், டும், தும், றும், கு, து, று, என், ஏன், அல், அன், ஆன், அள், ஆள், அர், ஆர், ப, மார் என்பன. (11) தன்மைப் பன்மையில் வரும் திரிபு 203. | அவற்றுள், பன்மை உரைக்கும் தன்மைக் கிளவி எண்ணியல் மருங்கில் திரிபவை உளவே. |
1. அரு என்பதும் பாடம். 2. புறம்-375.
|