உளப்பாட்டுத் தன்மைக்கண் வருவதோர் திரிபு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். மேற் சொல்லப்பட்டவற்றுள், உளப்பாட்டுப் பன்மைச் சொல் எண் இயலும்வழித் திரிபவை உண்டு, எ - று. எ - டு. எண் என்பது இரண்டு மூன்று என்பன. யாம் இருவேம் எனற்பாலது, யாம் இருவர் எனவும் வரும். இன்னும் எண்ணியன் மருங்கின் என்பதற்கு, எண்ணப்பட்டியன்ற மருங்கின் எனப் பொருள் உரைக்க உளப்பாட்டுத் தன்மைக்கு ஓதிய எட்டீற்றினும், திரிபவை உள என்றுமாம். வருவோம், உண்போம் என ஓகாரம் பெற்றுவருவன ஏகாரத் திரிபு என்று கொள்க. (12) யார் என்னும் வினைமுற்று 204. | யாஅ ரென்னும் வினாவின் கிளவி அத்திணை மருங்கின் முப்பாற்கு முரித்தே. |
இது ரகரவீற்றுக்கண் வழுவமைத்தலை உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். யார் என்னும் வினாப் பொருண்மை உணர்த்துஞ் சொல் அவ் வுயர் திணைக்கண் முப்பாற்கும் உரித்து, எ - று. யார் என்பது காலங் காட்டாமையின், வினைச் சொல் ஆகாது எனின், வேற்றுமை ஏலாமையான் வினை எனப்படும். அதனானேயன்றே, வினை எனப்படுவது காலமொடு தோன்றும் என்னாது, வேற்றுமை கொள்ளாது எனவும் ஓதல் வேண்டிற்று என்க. எ - டு. அவன் யார், அவள் யார், அவர் யார் எனவரும். (13) ன, ள, ர என்பவற்றின் ஈற்று ‘ஆ’ ‘ஓ’ ஆதல். 205. | பாலறி மரபின் அம்மூ வீற்றும் ஆஓ ஆகும் செய்யு ளுள்ளே. |
இது படர்க்கை வினைக்கண் வரும் திரிபு உணர்த்துதல் நுதலிற்று, இ - ள். பால் விளங்குதலை மரபாக உடைய னகாரம், ளகாரம், ரகாரம் ஆகிய மூவீற்றும் ஆகாரம் ஓகாரமாகித் திரியும் செய்யுளகத்து, எ - று. எ - டு. 1வினவி நிற்றந் தோனே. 2நல்லை மன்னென நகூஉப் பெயர்ந் தோளே. 3சான்றோ ரல்லர் தோழி எனவரும். செய்யுள் ஆகாரமாகி வரப் பெறாதோ எனின், வழக்கிற்கு உரியன செய்யுட்காம் என்பது சொல்லாமற் பெறுதும் என்று கொள்க. (14) ஆய் என்பது அங்ஙனமாதல் 206. | ஆயென் கிளவியும் அவற்றொடு கொள்ளும். |
1. அகம்--48. 2. அகம்--248. 3. (பாடம்) சென்றோரன்பிலர் தோழி.
|