பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, ஐம்பெருங்காப்பியம், ஐஞ்சிறு காப்பியம் ஆகிய நூல்களில் மிகமிக விரிந்த புலமையிருந்தது என்பதை நன்கறியலாம். (அ) வெவ்வேறு வினையையுடைய பொதுப்பொருளை எண்ணி அவற்றை முடிக்குங்கால் பொதுவினையே கொண்டு முடிக்க வேண்டும் என்பது கிளவியாக்கம் 45 ஆம் நூற்பாவின் கருத்தாகும். இதற்கு மாறாக, “.................................................................... ஊன் துவை கறிசோறு உண்டு வருந்துதொழி லல்லது பிறிதுதொழில் அறியா வாகலின்” (புறம்--14) |
என்ற பாடல் வந்துள்ளது என்பது இளம்பூரணர் கருத்து. எனவே உண்டு என்பது சிறப்பு வினை என்பது இவர் கருத்து. சேனாவரையர் உண்டு என்பது சிறப்பு வினையுமாம், ஒரோவழிப் பொதுவினையுமாம் என்றனர். தெய்வச்சிலையாரோ தம் புலமை தோன்ற இவ்‘வுண்டு’ என்பது பொதுவினையே என நிறுவுகின்றார். அவர் கூறுவதாவது: “உண்டு என ஒரு வினையால் (சிறப்பு வினையால்) வந்ததால் எனின் அது பொதுவினையென்று கொள்க. என்னை? உண்ணு நீர் வேட்டேன் என வந்தாற்கு (குறிஞ்சிக்கலி-15) எனவும், பாலும் உண்ணாள் பழங்கண் கொண்டு (அகம்-48) எனவும், கலைப்புற அல்குல் கழுகு குடைந்துண்டு (மணிமேகலை-6) எனவும், கள்ளுண்ணாப் போழ்து (குறள்-930) எனவும், உண்ணாமை வேண்டும் புலாஅல் (குறள்-257) எனவும் வருதலின். இவ்வருமை நினைந்து நினைந்து இன்புறற்குரியதாகும். தெய்வச்சிலையார் ‘உண்டு’ என்பது பொதுவினை எனக் குறித்தவாறே நச்சினார்க்கினியரும் கூறுவர். அதனை அவர் உரையானறிக. (ஆ) வியங்கோள் முன்னிலை தன்மைக்கண் வாராது படர்க்கைக்கு மட்டுமே வரும் என்பது தொல்காப்பியர் கருத்து. எனினும் இளம்பூரணர் உள்ளிட்ட உரையாசிரியர் எல்லாம் முன்னிலை தன்மைக்கண்ணும் சிறுபான்மை வரும் என்றனர். தெய்வச்சிலையாரோ நூலாசிரியர் நெறியையே பின்பற்றி முன்னிலை தன்மைக்கண் சிறிதும் வாராது என்றனர். இங்ஙனம் வன்மையாகக் கூறுகின்ற பொழுது இவர்தம் உள்ளத்தில் இரு இலக்கியங்கள் எதிர் ஒலித்தன. அவற்றிற்கும் அமைதி கண்டு செல்கின்றார் இவ்வுரையாசிரியர். அவை வருமாறு:-- “கடாவுக பாகநின் கால்வல் நெடுந்தேர்” (அகநானூறு) எனச் செய்யுளகத்து (முன்னிலைக்கண்)
|