118தொல்காப்பியம்[வினையியல்]

118

இ - ள். அ ஆ வ என்னும் ஈற்றினை உடைய அக்கூற்று மூன்று சொல்லும் அஃறிணைப் படர்க்கைக்கண் பன்மை உணர்த்தும் சொல்லாம், எ - று.

அஃறிணை என்பது வருகின்ற சூத்திரத்தினின்றும் தந்துரைக்கப்பட்டது.

எ - டு. உண்டன, உண்கின்றன, உண்பன; உண்ணல; உண்ணா; உண்குவ எனவரும். பிறவுமன்ன.

(19)

அஃறிணை ஒருமைத் தெரிநிலை வினை முற்று

211.ஒன்றன் படர்க்கை1 தறட ஊர்ந்த
குன்றிய லுகரத் திறுதி யாகும்.

அஃறிணைப் படர்க்கைக்கண் ஒருமை உணரவரும் சொல்லாமாறு
உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். அஃறிணையொன்றனை அறியவரும் படர்க்கை வினைச்சொல் த, ற, ட க்களை ஊர்ந்த குற்றியலுகரத்தினை ஈறாக உடைய, எ - று.

எ - டு. உண்டது, உண்ணாநின்றது, உண்பது, உண்ணாது; கூயிற்று; உண்டு எனவரும். உண்டு என்பது உண்டது என்னும் பொருட்டு. பிறவுமன்ன.

(20)

அஃறிணை வினைமுற்றின் தொகை

212.பன்மையும் ஒருமையும் பாலறி வந்த
அம்மூ விரண்டும் அஃறிணை யவ்வே.

விரிந்தது தொகுத்தலை உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். மேல், பன்மையும் ஒருமையுமாகிப் பால் உணர எடுத்து ஓதப்பட்ட ஆறு ஈற்று வினைச்சொல்லும் அஃறிணையிடத்த, எ - று.

அவையாவன, அ, ஆ, வ, து, று, டு என்பன.

(21)

எவன் என்னும் வினைமுற்று

213.அத்திணை மருங்கின் இருபாற் கிளவிக்கும்
ஒக்கும் என்ப எவன்என் வினாவே.

அஃறிணைக்கு உரியதோர் வினாச்சொல் பாலுணர்த்துமாறு
உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். அஃறிணை இடத்து இருபாற் கிளவிக்கும் எவன் என் வினா ஒக்கும் என்று சொல்லுவர், எ - று.


1. ‘த ட ற’ எனப் பாடங் கொள்வர் இளம்பூரணர்.