அஃறிணை வினைக்குறிப்பிற்குப் புறநடை உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். மேல் ஓதிய வாய்பாட்டால், பால் விளங்க வந்தன வாய்ச் சொல்லப்பட்ட மரபினாற், குறிப்பொடு வரூஉம் வினைச் சொல் அஃறிணைத் தெரிநிலை வினையோடு வேறுபாடில, எ - று. அதற்கு ஓதிய ஈறே, இதற்கும் ஈறென்பது பெற்றாம். எ - டு. உடைத்து இன்று, குண்டுகட்டு, குறுந்தாள, பொல்லா எனவரும். ‘அன்ன மரபிற் குறிப்பொடு வரூஉம்’ என்றதனான், உருபும், பொருளும், வினையும் ஒற்றுமைப்பட்டு வருவனவும், உயர்திணை வினைக்கண் ஓதிய இடமும், வன்மையும் பற்றி வருவனவுங் கொள்க. முதற்று, முதல என்பன உருபும், பொருளும், வினையும் ஒற்றுமைப்பட்டன. மேற்று. மேல; மாடத்தது, மாடத்த என்பன இடம் பற்றி வந்தன. ஓடவற்று, ஓடவல்ல; ஓடவல்லாது, ஓடவல்லா என்பன வன்மைபற்றி வந்தன. பிறவுமன்ன. (24) விரவு வினையின் பெயரும் முறையும் தொகையும் 216. | முன்னிலை வியங்கோள் வினையெஞ்சு கிளவி இன்மை செப்பல் வேறென் கிளவி செய்ம்மன செய்யும் செய்த என்னும் அம்முறை நின்ற ஆயெண் கிளவியும் 1பிரிபுவேறு படூஉம் செய்திய வாகி இருதிணைச் சொற்குமோ ரன்ன உரிமைய. |
நிறுத்த முறையானே இருதிணைக்கும் உரிய வினை உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். மேற் சொல்லப்பட்ட வற்றுள், முன்னிலை வினை முதலாக எடுத்து ஓதப்பட்ட எண்வகைச் சொல்லும், பிரிந்து பொருள் வேறுபடூஉம் செய்கையவாகிய இருதிணைச் சொற்கும் ஒத்த உரிமையை உடைய என்றவாறு. உதாரணம் முன்னர்க் காட்டுதும். (25) முன்னிலை ஒருமை வினைமுற்று 217. | அவற்றுள், முன்னிலைக் கிளவி இ ஐ ஆயென வரூஉம் மூன்றும் ஒப்பத் தோன்றும் 2ஒருவர்க்கும் ஒன்றற்கும். |
1. பிரிவு வேறுபடூஉம் என்பது இளம்பூரணர் பாடம். திரிபு வேறுபடூஉம்’ என்பது சேனாவரையர் பாடம். 2. ‘ஒருவற்கும்’ என்பது இளம்பூரணர் பாடம்.
|