ஆராய்ச்சி முன்னுரை15

15

வியங்கோள் வந்ததால் எனில், நீ கடாவுக என வாராது, பாக! கடாவுக என வருதலின் அது படர்க்கைப் பெயர் விளியேற்ற வழி வந்ததென்க. “என் முதல் பிழைத்தது கெடுக என்னாயுள்” (சிலப்--வழக்குரை: 77) எனத் தன்மைக்கண் (வியங்கோள்) வந்ததால் எனில் ஆண்டுக் கெடுக எனப்பட்டது ஆயுளாதலின் அதன்மேல் வந்ததென்க.

தேரோட்டும் பாகனை விளித்துப் பாக! கடாவுக எனத் தலைவன் கூறுதலின் நீ என்னும் முன்னிலைப் பெயர் வாரா தொழியினும் முன்னிலையேயாம். இது போன்றே கெடுக என்னாயுள் என்றவிடத்தும், ஆயுள் என வாளா கூறாது ‘என்னாயுள்’ எனத் தன்மைக்கண் வைத்துக் கூறுதலின் ஆண்டும் தன்மைக் கண்ணேயே வியங்கோள் வந்ததாம். இங்ஙனம் இவ்விரு கருத்தும் மறுத்தற்குரியதே எனினும், தன்மை முன்னிலைக்கண் வியங்கோள் வாராது எனக் கூறுங்கால், அங்ஙனம் வரும் இவ்விரு இலக்கியங்களும் நினைவிற்கு வந்ததும், அவற்றிற்கு அமைதி கண்டதும் பாராட்டுதற்குரியதேயாகும்.

(இ) ‘குறித்தோன் கூற்றம் தெரித்துமொழி கிளவி (கிளவியாக்கம்--54) என்னும் நூற்பாவிற்கு, வினை கொண்டும் இன்னதென விளங்க முடியாத பல பொருள் ஒரு சொற்கள் சொல்லுவான். குறிப்பு வழியே பொருள் உணர்த்தும் என உரை கண்டவர் அதற்குத் தக இரு இலக்கியங்களை மேற்கோளாகக் காட்டுகின்றார். ஒன்று, ‘நிவந்தோங்கு உயர்கொடிச் சேவலோய்’ (பரிபாடல்: 3--18) என்பது. பிறிதொன்று. ‘சேவலங் கொடியோன் காப்ப’ (குறுந்தொகை--1) என்பது. இவ்வீரிடத்தும் ‘சேவலங் கொடியோன்’ என இருப்பினும், சொல்லுவோன் குறிப்பால் முன்னையது மாயவனையும், பின்னையது முருகனையும் குறிக்கும் என்றனர். இவ்விரண்டிடங்களையும் ஒருங்கு கொண்டு வந்து இவ்விடத்தில் காட்டியது பெரிதும் பாராட்டுதற்குரியது.

(ஈ) “அவற்றுள், வேற்றுமைத் தொகையே வேற்றுமையியல” என்ற நூற்பாவில் (எச்சவியல்--16) இரண்டிரண்டு சொற்களாலேயே தொகையிலக்கணம் வரும் என விளக்கு முகமாகத் திருமுருகாற்றுப் படையுள்,

“உலக முவப்ப வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்

கோவற விமைக்குஞ் சேண்விளங் கவிரொளி
யுறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள்

செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை
மறுவில் கற்பின் வாணுதல் கணவன்”