148தொல்காப்பியம்[இடையியல்]

148

தஞ்சம் என்னும் இடைச்சொல்லின் பொருள்

263.

தஞ்சக் கிளவி எண்மைப் பொருட்டே.

இதுவும் அது.

இ - ள். தஞ்சம் என்பது எளிமை என்னும் பொருண்மையை உடைத்து, எ - று.

எ - டு. 1முரசுகெழு தாயத் தரசோ தஞ்சம் என்பது எளிதென்பது குறித்து நின்றது.

(18)

அந்தில் என்னும் இடைச்சொல்லின் பொருள்

264.

அந்தில் ஆங்க அசைநிலைக் கிளவியென்(று)
ஆயிரண் டாகும் இயற்கைத் தென்ப.

இதுவும் அது.

இ - ள். அந்தில் என்பது ஆங்கு என்னும் பொருண்மை பெற்றும், அசைநிலையாகியும் வரும், எ - று.

எ - டு. 2வருமே சேயிழை யந்திற்-கொழுநற் காணிய என்பது ஆங்கென்னும் பொருளுணர்த்திற்று.

அந்திற் கச்சினன் கழலினன் (அகம். 76) என்புழி, அசை நிலையாயிற்று.

(19)

கொல் என்னும் இடைச்சொல்லின் பொருள்

265.

கொல்லே ஐயம்.

இதுவும் அது.

இ - ள். கொல் என்பது ஐயங் குறித்து வரும், எ - று.

எ - டு. அதுகொல் தோழி காம நோயே என்றவழி, ஐயங்காட்டிற்று.

(20)

எல் என்னும் இடைச்சொல்லின் பொருள்

266.எல்லே இலக்கம்.

இதுவும் அது.

இ - ள். எல் என்பது இலங்குதல் குறித்து வரும், எ - று.

எ - டு. ‘எல்வளை’ (புறம். 24) இலங்குவளை.

இது உரிச்சொல்லன்றோ எனின், அது குறைச்சொல்லாகி நிற்கும். இது குறையின்றி நிற்றலின் இடைச்சொல்லாயிற்று.

(21)


1. புறம். 73.

2. குறுந். 293.