எய்திய தன்மேற் சிறப்பு விதி வகுத்தலை உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். மேற் சொல்லப்பட்டவற்றுள் இகுமும். சின்னும் தன்மையினும், படர்க்கையினும் வருதல் தகுநிலை யுடையவென்று சொல்லுவர், எ - று. எ - டு. “கண்டிகு மல்லமோ.” (ஐங்குறு-121) “கண்ணும் படுமோ வென்றிசின் யானே” (நற்-61) இவை கண்டேம், என்றேன் என்னும் பொருட்கண் வந்தன. “புகழ்ந்திகு மல்லரோ பெரிதே; பாடல் சான்ற விறல்வேந் தனும்மே,” “வெப்புடைய வரண் கடந்து துப்புறுவர் புறம் பெற்றிசினே.” இவை புகழ்ந்தார். பெற்றான் என்னும் பொருட்கண் வந்தன. “யாரஃ தறிந்திசி னோரே.” (குறுந்.18) எனப் பால் காட்டும் எழுத்தோடு அடுத்துவருதலுங் கொள்க. (26) அம்ம என்பது அசைநிலையாதலேயன்றிப் பொருள் படுவதும் உண்டு எனல் இதுவும் அசைநிலைச்சொல் பொருள் படுமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். அம்ம என்னும் சொல் அசைநிலை யாகலேயன்றிக் கேள் என்னும் பொருளும் படும், எ - று. எ - டு. ‘அம்ம வாழி தோழி’ (ஐங்-31) என்றவழிக் கேள் என்னும் பொருள் குறித்து நின்றது. ‘உண்டா லம்மவிவ் வுலகம்’ (புறம்-182.) என்பது அசைநிலையாகி வந்தது. அசை நிலை என்பது எற்றாற் பெறுது மெனின், மேல் “அம்ம என்னும் அசைச்சொல் நீட்டம்” (விளிமரபு-35) என்பதனாற் பெறுதும். (27) ஆங்க என்பது உரையசையாதல் அசைநிலை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். ஆங்க என்னுஞ்சொல் உரையிடத்து அசை நிலையாம், எ - று. எ - டு. “ஆங்கக் குயிலு மயிலுங் காட்டி” எனவரும். (28) ஒப்பில் போலியும் உரையசையாதல் 274. | ஒப்பில் போலியும் அப்பொருட் டாகும். |
இதுவும் அது. இ - ள். ஒப்புக் குறியாத போல் என்னும் சொல்லும் உரையசையாம், எ - று.
|