152தொல்காப்பியம்[இடையியல்]

152

எ - டு. அவர் வந்தார் போலும். இதனுள் வந்தார் எனத் துணிந்த வழி வருதலின், அசைநிலையாயிற்று.

அசைநிலைச் சொற்கள்

275.யாகா,
பிறபிறக் கரோபோ மாதென வரூஉம்

1ஆயேழ் சொல்லும் அசைநிலைக் கிளவி.

இதுவும் அது.

இ - ள். யா முதலாகச் சொல்லப்பட்ட ஏழு சொல்லும் அசைநிலைக் கிளவியாம், எ - று.

எ - டு. யா - “தோழியா சுவர்க்கம் போக்கிங்கென்”.

கா - “புற நிழற் பட்டாளோ வவளிவட் காண்டிகா”.

பிற - “தான் பிற-வரிசை யறிதலிற் றன்னுந் தூக்கி”. (புறம். 140)

பிறக்கு - “நசைபிறக் கொழிய”.

அரோ-“நோதக, விருங்குயி லாலுமரோ”. (கலி 33.)

போ-“பிரியின் வாழா தென்போ தெய்ய”.

மாது-“விளிந்தன்று மாதவர்த் தெளிந்தவென் னெஞ்சே.” (நற்-178)
என வரும்.

(30)

பிரிவில் அசைநிலைகள்

276.

ஆக ஆகல் என்பது என்னும்
ஆவயின் மூன்றும் பிரிவில் அசைநிலை.

இதுவும் அது.

இ - ள். இவை மூன்று சொல்லும் பிரிவின்றி இரட்டித்த விடத்து அசைநிலையாம் என்றவாறு.

எ - டு. ஆக ஆக, ஆகல் ஆகல், என்பதென்பது எனவரும்.

(31)

ஒளகாரம் அல்லாத பிற உயிரெழுத்துக்கள் பொருள்படுமாறு

277.

ஈரள பிசைக்கும் இறுதியில் உயிரே
ஆயியல் நிலையுங் காலத் தானும்
அளபெடை யின்றித்
2தனிவருங் காலையும்
உளவென மொழிப பொருள்வேறு படுதல்
குறிப்பின் இசையான் நெறிப்படத் தோன்றும்.


1. ஆவேழ் சொல்லும் என்பதும் பாடம்.

2. ‘தான்வரும்’ என்பதும் பாடம். பிற உரையாசிரியர்கள் இப்பாடமே கொண்டனர்.