154தொல்காப்பியம்[இடையியல்]

154
எ - டு.சென்றே யெறிப வொருகால் சிறுவரை
நின்றே யெறிப பறையினை--நன்றேகாண்
முக்காலைக் கொட்டினுள் மூடித்தீக்கொண் டெழுவர்
செத்தாரைச் சாவார் சுமந்து.

(நாலடி-24.)

இதனுள் நன்றே காண் என்பது தீதே காண் என்னுங் குறிப்புணர்த்திற்று. “நின்னையன்றே திருமுக்குடையாய்” என்றவழி அன்றே என்பது அல்லாமையைக் குறியாது முக்குடையானையே சுட்டி நின்று அவன் கேட்பது

“பொன்னே கொடுத்தும் புணர்தற் கரியாரைக்
கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும்--அன்னோ
பயமில் பொழுதாக் கழிப்பரே நல்ல
நயமி லறிவி னவர்”

(நாலடி-162.)

என்பதனுள், அன்னோ என்பது அருள் குறித்து நின்றது. 1“வெந்திறற் கூற்றம் பெரும்பே துறுப்ப--அந்தோ வளியென் வந்தனென் என்ற” என்றவழி, அந்தோ என்பது கேடு குறித்து நின்றது. அன்ன பிறவுமாவன வந்தவழிக் கண்டுகொள்க.

(33)

உம்மைக்குரியதோர் புறனடை

279.எச்ச உம்மையும் எதிர்மறை உம்மையும்
தத்தமுள் மயங்கும் உடனிலை இலவே.

உம்மைக்குரியதோர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். எச்ச உம்மையும், எதிர்மறை உம்மையும் தத்தமுள் மயங்கும் உடனிலை இல, எ - று.

எ - டு. சாத்தனும் வந்தான் என்றவழிக் கொற்றனும் வரும் என்றாதல், வந்தான் என்றாதல் கூறுதலன்றி, வாரான் என்னற்க. ஒரு தொழிலே கூறல் வேண்டும், என்றவாறு.

(34)

இதுவும் அது

280.எஞ்சுபொருட் கிளவி செஞ்சொ லாயிற்
பிற்படக் கிளவார் முற்படக் கிளத்தல்.

எச்ச உம்மைக்கண் வழூஉக்காத்தலை உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். எஞ்சு பொருட்கிளவி, உம்மையில் சொல்லாயின், அவ்வும்மையை வருகின்ற சொல்லோடு கிளக்க, எ - று.

எ - டு. சாத்தனும் வந்தான், கொற்றனும் வரும் என்றற் பாலதன் கண் ஓர் உம்மை வரில், சாத்தன் வந்தான், கொற்றனும் வரும் என்க, சாத்தனும் வந்தான், கொற்றன் வரும் என்னற்க.

(35)


1. புறம்-238.