156தொல்காப்பியம்[இடையியல்]

156

இதுவும் அது: ஏகாரத்திற்குப் புறனடை உணர்த்துதல்
நுதலிற்று.

இ - ள். எண்ணுக்குறித்த ஏகாரம் சொற்றொறுங் கொள்ளாது ஒருவழிக் கொளினும் எண்ணுக் குறித்து நடக்கும், எ - று.

எ - டு. தோற்றம் இசையே நாற்றஞ் சுவையே, உறலோடாங் கைம் புலனென மொழிப என்புழி, இடையிட்டு வந்தும் எண்ணுக் குறித்தது.

(39)

எனா, என்றா ஆகிய இரண்டும் எண்ணில் வருதல்

285.உம்மை தொக்க எனாவென் கிளவியும்
ஆஈ றாகிய என்றென் கிளவியும்
ஆயிரு கிளவியும் எண்ணுவழிப் பட்டன.

எண்ணின்கண் வருவன சில இடைச்சொல் உணர்த்துதல்
நுதலிற்று.

இ - ள். உம்மை தொக்க எனவின் திரிபாகிய எனா என்னுஞ் சொல்லும், ஆவீறாகிய என்று என்னும் சொல்லும் எண்ணின்கட் பட்டன. எனவும் என்பது எனா எனவும், என்று என்பது என்றா எனவும் வரும், எ - று.

எ - டு. வளிநடந் தன்ன வாஅய்ச்செல் லிவுளியொடு--கொடி நுடங்கு மிசைய தேரின ரெனாஅக்--கடல்கண் டன்ன வொண்படைத் தானையொடு--மலைமாறு மலைக்கும் களிற்றின ரெனாஅ (புறம்-197) என்பதனுள் எனவும் என்பது எனா என்றுவந்து எண்ணுக் குறித்தவாறு கண்டுகொள்க. ஒப்பு முருபும் வெறுப்பு மென்றா, கற்பு மேரு மெழிலு மென்றா (பொருளியல்-53). என்பதனுள் என்று என்பது ஆவொடு கூடி எண்ணுக் குறித்தவாறு கண்டுகொள்க.

(40)

எண்ணிடைச் சொற்களுக்கு முடிபு வேற்றுமை

286.அவற்றின் வரூஉம் எண்ணின் இறுதியும்
பெயர்க்குரி மரபிற் செவ்வெண் இறுதியும்
ஏயி னாகிய எண்ணின் இறுதியும்
யாவயின் வரினும் தொகையின் றியலா.

எண்ணுதற் குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். மேற் சொல்லப்பட்ட எனா என்றா என்பனவற்றான் வரும் எண்ணிறுதியும், பெயர்க்குரி மரபினாலெண்ணப்படும் செவ்வெண் இறுதியும், ஏகாரத்தான் எண்ணப்பட்ட எண்ணின் முடிவும் யாதானும் ஒரு நெறியான் வரினும் தொகையின்றி வழங்கா, எ - று.