[இடையியல்]சொல்லதிகாரம் தெய்வச்சிலையார்157

157
எ - டு.மாத்திரை யெழுத்திய லசைவகை யெனாஅ
யாத்த சீரே அடியாப் பெனாஅ
மரபே தூக்கே தொடைவகை யெனாஅ
நோக்கே பாவே அளவிய லெனாஅ
திணையே கைகோள் கூற்றுவகை யெனாஅ
கேட்போர் களனே காலவகை யெனா அப்
பயனே மெய்ப்பா டெச்சவகை யெனாஅ
முன்னம் பொருளே துறைவகை யெனாஅ
மாட்டே வண்ணமொடு யாப்பியல் வகையின்
ஆறுதலை யிட்ட அந்நா லைந்தும்.

(செய்யுளியல் - 1)

எனவும்,

“அவைதாம், பெயர்ச்சொல் லென்றா வினைச் சொல்லென்றா, இரண்டன் பாலா வியங்குமன் பயின்றே” எனவும்; “படைகுடி கூழமைச்சு நட்பரணாறும், உடையான் அரசருள் ஏறு” (குறள்-381) எனவும் “தேற்றம் வினாவே பிரிநிலை எண்ணே, ஈற்றசை இவ்வைந் தேகா ரம்மே” (சூ - 9) எனவும் எண் தொகைபெற்றவாறு கண்டுகொள்க.

‘கண்கால் புறமகம்’ என்னும் சூத்திரத்துள் (வேற்றுமையியல்-20) எனாவும், “ஒப்பு முருவும்” (பொருளியல்-53) என்னுஞ் சூத்திரத்துள் என்றாவும்; “1நிலப்பெயர் குடிப்பெயர்” என்னுஞ் சூத்திரத்துள் ஏகாரமும் தொகை பெற்றிலவாலெனில், அவை, ‘அன்ன பிறவும்’ எனவும், ‘கிளவியெல்லாம்’ எனவும், ‘அனைத்தும் எனவும் தொகைப் பொருண்மை தோன்ற வந்தன.

‘செல்ல லின்ன லின்னா மையே’ (உரியியல்--7) என்பதன்கண் தொகை பெற்றின்றாலெனின், யாவயின் வரூஉம் என்றமையால், தொகையின்றி வரினும், அப்பொருளுரைக்குங்கால், தொகையின்றி இயலா எனக்கொள்க.

உடம்பொடு புணர்த்தல் என்பதனான் எண்ணேகாரம் இடையிட்டு வருதலேயன்றி, எனாவும், என்றாவும் இடையிட்டு வருதலுங் கொள்க.

(41)

எண்ணும்மை தொக்கு வருதல்

287.உம்மை எண்ணின் உருபுதொகல் வரையார்.

எண்ணும்மைக்கு உரியதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். உம்மையான் எண்ணப்பட்ட பொருளின்கண் வரும் உருபாகிய உம்மை ஒரோவிடத்துத் தொகுதலும் நீக்கார், எ - று.

எனவே, சொற்றொறும் உம்மை கொடாக்காலும் உம்மை எண்ணாகும் என்றவாறாம்.


1. பெயரியல்-11.