இளம். வ-று : 1“வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி யரிவையைப் பெறுகதில் லம்ம யானே” (குறுந். 14) இது விழைவின்கண் வந்தது. 2 “பெற்றாங் கறிகதில் லம்ம விவ் வூரே” (குறுந். 14) இது காலம் பற்றி வந்தது. “வருகதில் லம்மருவஞ் சேரி சேர” (அகம் 276) என்பது, வந்தக்கால் இன்னதொன்று செய்வல் என்னும் சொல் ஒழிந்து நின்றமையால் ஒழியிசைக்கண் வந்தது. யாதானும் ஒரு சொல் ஒழிவுபடவரின் அஃது ஒழியிசை எனப்படும் என்றவாறு. சேனா. இ-ள் : விழைவு குறித்து நிற்பதும், காலங் குறித்து நிற்பதும், ஆண்டொழிந்து நின்ற சொற்பொருளை நோக்கி நிற்பதும் எனத் தில்லைச் சொல் மூன்றாம், எ-று. உ-ம் ; வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி யரிவையைப் “பெறுகதில் லம்ம யானே” (குறுந். 14) என அவளைப் பெறுதற்கண் உளதாகிய விழைவின்கண் வந்தது. “பெற்றாங் கறிகதில் லம்மவிவ் வூரே” (குறுந். 14) எனப் பெற்ற காலத்தறிக வெனக் காலங் குறித்து நின்றது. “வருகத்தில் லம்மருவஞ் சேரி சேர” (அகம். 276) என வந்தக்கால் இன்னது செய்வல் என்னும் ஒழியிசைப் பொருள் நோக்கிற்று. தெய். இதுவுமது. இ-ள் : விழைவுப் பொருளையும் காலப் பொருளையும் ஒழியிசைப் பொருளையும் உணர வரும் தில் என்னும் சொல், எ-று.
1. பொருள் : நேராக விளங்குகின்ற கூர்மையான பற்களையும் சிலவான சொற்களையும் உடைய பெண்ணை யான் அடைவேணாக. 2. பொருள் : பெற்ற பொழுது இவ்வூர் அறிக. |