அழுங்கல் என்பதற்கு மேலும் இருபொருள் 346. | அவற்றுள், அழுங்கல் இரக்கமும் கேடும் ஆகும். |
இ - ள். மேற் சொல்லப்பட்டவற்றுள், அழுங்கல் என்னும் சொல் இரக்கம் என்பதன் பொருண்மையும், கேடு என்பதன் பொருண்மையும் படும், எ - று. எ - டு. ‘மகவீழ்ந் தழுங்கிய’--இஃது இரக்கம். ‘குணனழுங்கக் குற்ற முழைநின்று கூறும்’ (நாலடி-353)--இது கேடு. (54) கழும் என்பதன் பொருள் 347. | கழுமென் கிளவி மயக்கஞ் செய்யும். |
இ - ள். கழும் என்பது மயக்கம் என்பதன் பொருள்படும், எ - று. எ - டு. ‘கழுமிய ஞாட்பின்’ (களவழி-11.) (55) செழுமை என்பதன் பொருள் 348. | செழுமை வளனும் கொழுப்பும் ஆகும். |
இ - ள். செழுமை என்பது வளன் என்பதன் பொருளும் கொழுப்பு என்பதன் பொருள்படும், எ - று. எ - டு. ‘செழும்பல் குன்றம்’--இது வளம். ’செழுந்தடி தின்ற செந்நாய்’--இது கொழுப்பு. (56) விழுமம் என்பதன் பொருள் 349. | 1விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் செய்யும். |
இ - ள். விழுமம் என்பது சீர்மை என்பதன் பொருளும், சிறப்பு என்பதன் பொருளும், இடும்பை என்பதன் பொருளும் படும், எ - று. எ - டு. ‘விழுமியோர்-காண்டொறுஞ் செய்வர் சிறப்பு.’ (நாலடி, 159)--இது சீர்மை. ‘வேற்றுமை யில்லா விழுத்திணைப் பிறந்து - (புறம்-27). இது சிறப்பு. ‘நின்னுறு விழுமங் களைந்தோன்’ (அகம்-170) இது இடும்பை. (57) கருவி என்பதன் பொருள்
1.விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் எனப் பாடங் கொள்வர் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும். ‘விழுமம் சீர்மையும் இடும்பையும் செய்யும்’ என்பது இளம்பூரணர் பாடம்.
|