20தொல்காப்பியம் சொல்லதிகாரம்

20

சினைமுதற் சொல்லைச் சொல்லும் முறைமை

31.

இனைத்தென வறிந்த சினைமுதற் கிளவி
வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும்.

ஒருசார் செப்பு வழுக் காத்தலை நுதலிற்று.

இ - ள். இத்துணை யென வரையறுக்கப்பட்ட சினைக்கிளவியும், முதற்கிளவியும் தொழிற்படு தொகுதிக்கண் உம்மை பெறல் வேண்டும், எ - று.

எனவே, தொழிற்படாத் தொகை இயல்பாகி வரப்பெறும் என்பது பெறுதும்.

எ - டு. தேவர் முப்பத்து மூவரும் வந்தார்; நங்கை முலையிரண்டும் நல்ல : இவை தொழிற்பட்ட தொகை. தேவர் முப்பத்துமூவர், ஆவிற்கு முலை நான்கு : இவை தொழிற்படாத்தொகை.

“கடுவன் முதுமகன் கல்லா மூலற்கு--வதுவை வந்த வன்பறழ்க்குமரி--இருதோள் தோழர்பற்ற” என்புழி உம்மை வந்த தன்றால் எனின் ஆண்டு எஞ்சிநின்றது என்க.

(31)

பொருந்தும் பொருளையும் பொருந்தாப் பொருளையும்
சொல்லும் மரபு

32. மன்னாப் பொருளும் அன்ன வியற்றே.

இது மரபுவழுக் காக்கின்றது.

இ - ள். பொருந்தும் பொருளும் பொருந்தாப் பொருளும் உறழவேண்டும் இடத்தும், பொருந்தும் பொருள் கூறுமிடத்தும் உம்மை கொடுத்துச் சொல்லவேண்டும், எ - று.

வேதாகமத்துணிவு ஒருவர்க்கு உணர்த்துமிடத்து, உலகும், உயிரும்,பரமும் அனாதி; பதியும், பசுவும், பாசமும் அனாதி எனவரும். உலகும் உயிரும் பரமும் பசுவும் பொருந்தும் பொருள் ஆனவாறும்; பாசமும் பதியும் இவற்றோடு பொருந்தாத பொருள் ஆனவாறுங் காண்க. 1‘உடம்பும் உயிரும் வாடியக் கண்ணும் எனவும், 2‘நோயும் இன்பமும்’ எனவும் கூறியவாறுங் காண்க. மன்னிக் கழிகின்றேன் என்றான்: -- மன்னுதல் பொருத்தமும் மன்னாமை பொருந்தாமையுமானவாறுங் காண்க.

இரண்டாவது ஏட்டிற்காணும் உரை.
இதுவுமது.

இ - ள். நிலையாத பொருள் உம்மை பெறல்வேண்டும், எ - று. அவையாவன இளமை, செல்வம், யாக்கை யென்பன.


1. தொல். பொருளியல்-1.

2. ” ” 2.