[உரியியல்]சொல்லதிகாரம் தெய்வச்சிலையார்177

177

இலம்பாடு, ஒற்கம் என்பவற்றின் பொருள்

356.இலம்பா டொற்கம் ஆயிரண்டும் வறுமை.

இ - ள். இலம்பாடு என்னுஞ் சொல்லும், ஒற்கம் என்னுஞ் சொல்லும் வறுமை யென்னுஞ் சொல்லின் பொருள்படும், எ - று.

எ - டு. இலம்படு புலவர் ஏற்றகைந் நிறைய (மலைபடு-576). ஒக்க லொற்கஞ் சொலிய (புறம்-327).

(64)

ஞெமிர்தல், பாய்தல் என்பவற்றின் பொருள்

357.ஞெமிர்தலும் பாய்தலும் பரத்தற் பொருள்.

இ - ள். ஞெமிர்தல் என்னுஞ் சொல்லும், பாய்தல் என்னுஞ் சொல்லும் பரத்தல் என்பதன் பொருள்படும், எ - று.

எ - டு. தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து (நெடுநல்-90). பாய்புனல்.

(65)

கவர்பு என்பதன் பொருள்

358. 1கவர்புவிருப் பாகும்.

இ - ள். கவர்பு என்னுஞ் சொல் விருப்பு என்பதன் பொருள்படும், எ - று.

எ - டு. கவர் நடைப்புரவி (அகம்-130).

(66)

சேர் என்பதன் பொருள்

359.சேரே திரட்சி

இ - ள். சேர் என்னுஞ் சொல் திரட்சி யென்பதன் பொருள்படும், எ - று.

எ - டு. சேர்ந்துசெறி குறங்கு (நற்-170).

(67)

வியல் என்பதன் பொருள்

360.வியலென் கிளவி யகலப் பொருட்டே.

இ - ள். வியல் என்னுஞ் சொல் அகலம் என்பதன் பொருள்படும், எ - று.

எ - டு. வியலுலகம்.

(68)

பே, நாம், உரும் என்பவற்றின் பொருள்

361.

பேஎ நாம் உருமென வரூஉங் கிளவி
ஆமுறை மூன்றும் அச்சப் பொருள.


1. ‘கவர்வு’ எனப் பாடம் கொள்வர் ஏனைய உரையாசிரியர்கள்.