இ - ள். பேஎ என்னுஞ் சொல்லும், நாம் என்னுஞ் சொல்லும், உரும் என்னுஞ் சொல்லுமாகிய அம்முறைமையையுடைய மூன்று சொல்லும் அச்சப் பொருண்மையை உடைய, எ - று. எ - டு. மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள் (குறுந்-87). 1நாம நல்லராக் கதுவியாங்கு. உருமில் சுற்றமோ டிருந்தோற் குறுகி (பெரும்-447). (69) வய என்பதன் பொருள் இ - ள். வயவென்னுஞ் சொல் வலியென்பதன் பொருள்படும், எ-று. எ - டு. வயக்களிறு. (மது-15) (70) வாள் என்பதன் பொருள் இ - ள். வாள் என்னுஞ் சொல் ஒளியென்பதன் பொருள்படும். எ-று. எ - டு. வாணுதல்.(முருகு.6). (71) துயவு என்பதன் பொருள் 364. | துயவென் கிளவி அறிவின் றிரிபே. |
இ - ள். துயவு என்னுஞ் சொல் அறிவின் திரிபாகிய பொருள்படும்.எ-று. எ - டு. துயவுற்றேம் யாமாக. (72) உயா என்பதன் பொருள் இ - ள். உயா என்னுஞ்சொல் உயங்கல் என்பதன் பொருள்படும், எ-று. எ - டு பருந்திருந் துயாவிளி பயிற்றும். (அகம்-16)) (73) உசா என்பதன் பொருள்
1. நாம நல்லார் எனப் பல உரைகளுள்ளும் காணப்படும் இதனைப் பண்டிதர் திரு. அ.கோபாலையரவர்கள் கூர்ந்து ஆய்ந்து, ‘நாம நல்லரா’ என விருத்தல் வேண்டும் என்றனர். இது சாலவும் பொருத்தமுடையதே என்பது கரந்தைத் தமிழ்ச்சங்கப் பதிப்பிலுள்ள அடிக் குறிப்பாகும்.
|