[உரியியல்]சொல்லதிகாரம் தெய்வச்சிலையார்179

179

இ - ள். உசா என்பது சூழ்ச்சி என்பதன் பொருள்படும், எ-று.

எ - டு. யானென் றுசாவுகோ வைய சிறிது. (கலி-எ)

(74)

 வயா என்பதன் பொருள்

367.வயாவென் கிளவி வேட்கைப் பெருக்கம்.

   இ - ள். வயா என்னுஞ் சொல் வேட்கைப் பெருக்கத்தினை யுணர்த்தும். எ-று.

  எ - டு. தொடிஇய செல்வார்த் துமித்தெதிர் மண்டுங் கடுவய நாகுபோல் நோக்கி.1 வயா என்றது கன்றின்மேற் காதல் குறித்து நின்றது.

(75)

 கறுப்பு. சிவப்பு என்பவற்றின் பொருள்

368.கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள்.

  இ - ள். கறுப்பு என்பதும் சிவப்பு என்பதும் வெகுளி என்பதன் பொருளையுடைய, எ-று. 

  எ - டு. நிற்கறுத் தோரரும் அரணம் போல். நீசிவந் திறுத்த நீரழி பாக்கம் (பதிற்.13)

(76) 

அவற்றிற்கு மேலும் ஒருபொருள்

369.நிறத்துரு வுணர்த்தற்கும் உரிய வென்ப.

 இ - ள். மேற் சொல்லப்பட்ட கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருட்கண் வருதலன்றி, நிறத்துரு உணர்த்தற்கும் உரிய, எ-று.

 எ - டு. கறுத்த காயா, சிவந்த காந்தள் (பதிற்-15).

(77)

 நொசிவு, நுழைவு, நுணங்கு என்பவற்றின் பொருள்

370.நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை.

 இ - ள். நொசிவு என்பதூஉம், நுழைவு என்பதூஉம், நுணங்கு என்பதூஉம், நுண்மை என்பதன் பொருள்படும், எ-று.

எ - டு. நொசி மருங்குல்.2 நுழைநூற் கலிங்கம் (மலைபடு-561) நுணங்கிய கேள்வியர் (குறள்-419).

(78)

 புனிறு என்பதன் பொருள்

371.புனிறென் கிளிவியீன் றணிமைப் பொருட்டே.


1. முல்லைக்கலி. 16.

2. குறிஞ்சிக் கலி. 24.