இ - ள். புனிறு என்பது ஈன்றணித்தென்னும் பொருள்பட்டு நிற்கும். எ-று. எ - டு. புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி (அகம்-56.) (79) நனவு என்பதன் பொருள் 372. | நனவே களனும் அகலமுஞ் செய்யும். |
இ - ள். நனவென்பது களன் என்பதன் பொருண்மையும், அகலம் என்பதன் பொருண்மையும் உணர்த்தும், எ-று. எ - டு. நனவுப்புகு விறலியிற் றோன்றும் நாடன் (அகம்-82). இது களம். நனந்தலை யுலகம். (பதிற்-63). இது அகலம். (80) மத என்பதன் பொருள் 373. | மதவே மடனும் வலியும் ஆகும். |
இ - ள். மத என்னுஞ் சொல் மடம் என்பதன் பொருண்மையும், வலியென்பதன் பொருண்மையும் உணர்த்தும், எ-று. எ - டு. பதவுமேய்ந்த மதவுநடை நல்லான் (அகம்-14-காண்க). இது மடம். கயிறிடு கதச்சேப் போல மதமிக்கு, (அகம்-36). இது வலி. (81) அதற்கு மேலும் இருபொருள் 374. | மிகுதியும் வனப்பும் ஆகலும் உரித்தே. |
இ - ள். மேற் சொல்லப்பட்ட மத என்னும் சொல் மிகுதி என்பதன் பொருளும், வனப்பு என்பதன் பொருளும் படும், எ-று. எ - டு. பொருநா கிளம்பாண்டி-றேரூரச் செம்மாந் ததுபோன் மதைஇனள்.1 இது மிகுதி. மாதர் வாண்முகம் மதைஇய நோக்கே (அகம்-130) இது வனப்பு. (82) யாணர் என்பதன் பொருள் 375. | புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி. |
இ - ள். யாணர் என்னும் சொல் புதியது படுதல் என்னும் பொருண்மையை உடைத்து. எ-று, எ - டு. வித்தொடு சென்ற வட்டி பற்பல, மீனொடு பெயரும் யாண ரூர (நற்-210)-நாடொறும் புதியது படுகின்றவூர். (83) அமர்தல் என்பதன் பொருள்
1. முல்லைக்கலி. 9.
|