இ - ள். அமர்தல் என்பது மேவல் என்பதன் பொருள்படும், எ-று. எ - டு. அகனமர்ந்து செய்யாளுறையும் (குறள்-84). (84) யாணு என்பதன் பொருள் இ - ள்.1யாணு என்னுஞ் சொல் கவின் என்பதன் பொருள்படும், எ-று. எ - டு. யாணு விசும்பி னமர ருளப்படப்-பேணிப் பேணிப் பெரிதெனைப் பெட்டபின்-அழகிய விசும்பு என்றவாறு, (85) பரவு. பழிச்சு என்பவற்றின் பொருள். 378. | பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள். |
இ - ள். பரவலும், பழிச்சலும் வாழ்த்தலின் பொருள்படும், எ-று. எ - டு. கடவுட் பரவிக் கைதொழூஉப் பழிச்சி (மலை-538). (86) கடி என்பதன் பொருள் 379. | கடியென் கிளவி வரைவே கூர்மை காப்பே புதுமை விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே அச்சம் முன்னேற் றாயீ ரைந்தும் மெய்ப்படத் தோன்றும் பொருட்டா கும்மே. |
இ - ள். கடி என்னும் சொல் வரைவு முதலாக முன்றேற்றீறாக ஓதப்பட்ட பத்துச் சொல்லினும் தெளியத் தோன்றும் பொருளை யுடைத்து. எ-று. எ - டு. கடிந்த கடிந்தொரார் செய்தார்க் கவைதாம், முடிந்தாலும் பீழை தரும் (குறள்-658). இது வரைவு. கடுநுனைப் பகழி; இது கூர்மை, கடி என்னும் சொற்றானே கடு எனத் திரிந்து வந்தது. கடியில் புகூஉம் கள்வன்போல்; இது காவல். கடியுண் கடவுட்கிட்ட சிறுகுரல்-அறியாதுண்ட மஞ்ஞை. (குறு-105). இது புதிதுண் கடவுள். கடுந்தேர் குழித்த ஞெள்ளலாங்கண்.2இது விரைவு. கடும் பகல் (அகம்-148) இது விளக்கம். கடுங்கா லொற்றலின். (பதிற்-25). இது மிகுதி. கடிகாவிற் பூச்சூடினன். இது சிறப்பு. கடும் பாம்பு வழங்குந் தெரு. (இஃது
1. ஆணு என்றும் பாடம். 2. புறம்-15.
|