182தொல்காப்பியம்[உரியியல்]

182

வழங்குந் தெரு. (இஃது அச்சம். கடுஞ்சூ டருகுவ னினக்கே (அகம் 110)--நீ தெளியுமாறு சூளுறுகின்றேன். இது முன்றேற்று.

(87)

அதற்கு மேலும் இருபொருள்

380.ஐயமும் கரிப்பும் ஆகலும் உரித்தே.

இ - ள். மேற் சொல்லப்பட்ட கடி என்னுஞ் சொல் ஐயப் பொருண்மையும்., கரித்தற் பொருண்மையும் ஆகலும் ஆம், எ-று.

எ - டு. போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின், தேற்றுதல் யார்க்கும் அரிது (குறள்-693). இது ஐயம். கடிமிளகு தின்ற கல்லா மந்தி. இது கரிப்பு.

(88)

ஐ என்பதன் பொருள்

381.ஐவியப் பாகும்.

இ - ள். ஐ என்பது வியப்பு என்பதன் பொருள்படும்., எ-று.

எ - டு. ஐயென விம்மி யவற்கது கூறிய, பொய்யில் புகழோன் புகழடி கைகூப்பி-வியப்பென்றது விம்மியென்றவாறு.

(89)

முனைவு என்பதன் பொருள்

382.முனைவுமுனி வாகும்.

இ - ள். முனைவு என்பது முனிதல் என்பதன் பொருள்படும், எ-று.

எ - டு. சேற்றுநில முனைஇய செங்கட் காரான் (அகம்-46).

(90)

வை என்பதன் பொருள்

383வையே கூர்மை.

இ - ள். வை என்னும் சொல் கூர்மை யென்பதன் பொருள்படும், எ-று.

எ - டு. வைந்நுனைப் பகழி (முல்லை-73).

(91)

எறுழ் என்பதன் பொருள்

384.எறுழ்வலி யாகும்.

இ - ள். எறுழ் என்பது வலி என்பதன் பொருள்படும். எ-று.

எ - டு. 1போரெறுழ்த் திணிதோள். (பெரும்பாண்-63).

(92)


1. பரேரெறுழ்த் திணிதோள்- என்பதும் பாடம்.