[உரியியல்]சொல்லதிகாரம் தெய்வச்சிலையார்187

187

என்றவழி’ நொறிலென்பது விரைவின்கண் வந்தது. ‘கவரிமான் கணம் கல்லறை தெவிட்ட’ என்ற வழித், தெவிட்ட என்பது அடையவென்பது குறித்து நின்றது. ‘களிறு வழங்கதர் கானத்தல்கி’1 என்றவழி. அல்குதல் தங்குதற்கண் வந்தது. ‘நெடும் பெருங் குன்றத் தமன்ற காந்தள்’2 என்றவழி, அமல்தல் நெருங்குதற்கண் வந்தது. ‘மலைநாறிய வியன்ஞாலத்து’ (மது-4) என்றவழி, நாற்றம் என்பது தோற்றங் குறித்து நின்றது. ‘நாற்ற நாட்டத் தறுகாற் பறவை’3 என்றவழி, நாடுதல் ஆராய்தற்கண் வந்தது. ‘தணக்குங்காற் கலுழ்பானாக் கண்ணெனவும் உளவன்றோ’ (கலி-25) என்றவழித், தணத்தல் நீக்கங் குறித்து நின்றது. ‘குரலோர்த் தொடுத்த சுகிர்புரி நரம்பின், அரலை திரிவுறீஇய’4 என்றவழி; அரலை குற்றங் குறித்தது. ‘மாக்கடல் நிவந்தெழு செஞ்ஞாயிற்றுக்கவினை’ (புறம்-4) என்றவழி நிவப்பென்பது ஓக்கங்குறித்தது. மாகந்திவளடி வருநீள்கொடி மாடவீதி என்றவழி, திவள்தலென்பது தீண்டுதல் குறித்தது இவர்தலென்பது பரத்தல் குறித்தது. ‘வாயாச் செத்தோய் என வாங்கே யெடுத்தனன்’ என்றவழிச் செத்தென்பது குறிப்புணர்த்திற்று. பிறவுமன்ன.

(100)

உரியியல் முற்றும்.

________


1. பொரு-49.

2. அகம்-4.

3. புறம்-70.

4. மலைபடு-23-24.