198தொல்காப்பியம்[எச்சவியல்]

198

வேற்றுமைத் தொகை

408.அவற்றுள்,
வேற்றுமைத் தொகையே வேற்றுமை யியல.

வேற்றுமைத் தொகை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். வேற்றுமை யியல்புடையன வேற்றுமைத் தொகை எ-று,

வேற்றுமையியல என்றதனான், வேற்றுமைகட்கு ஓதிய செயப்படு பொருள் முதலாக இடம் ஈறாக வரும் பொருண்மைக்கண் தொகுஞ்சொல் வேற்றுமைத் தொகையாம் என்று கொள்க. முதல் வேற்றுமை பெயர்ப் பயனிலை கொள்வழியும் விட்டிசைத்தே நிற்றலானும், எட்டாவது விரிந்து நிற்றலானும் இவையிற்றை யொழித்து ஏனைய தொகுமென்று கொள்க. ஏகாரம் தேற்றேகாரம்.

அவை தொகுமாறு:--படையைப் பிடித்தகை, குழையையுடைய காது, குதிரையாற் பூட்டப்பட்ட தேர்; தாயொடு கூடி மூவர்; கடிசூத்திரத்திற்கு வைத்த பொன்; வரையினின்றும் வீழாநின்ற அருவி; யானையது கோடு, குன்றத்துக்கண் வாழா நின்ற கூகை என்பன. படைக்கை குழைக்காது, குதிரைத்தேர், தாய்மூவர், கடிசூத்திரப்பொன், வரையருவி, யானைக்கோடு, குன்றக்கூகை எனத் தொகும். நிலத்தைக் கடந்தான். வாளால் வெட்டினான், கொலைக்கு உடம்பட்டான், வரையினின்றும் பாய்ந்தான், குன்றத்துக்கண் இருந்தான் என்றவழி, இறுதி நின்ற சொல் தொழிலுணர்த்தாது அது செய்தார்க்குப் பெயராகி வந்துழி, நிலங் கடந்தான், வாள் வெட்டினான், கொலையுடம்பட்டான், வரைபாய்ந்தான், குன்றத்திருந்தான் என இரண்டு பெயரும் ஒட்டி ஒரு சொல்லாகிவரும். கள்ளையுண்டல், வாளால் வெட்டல், கொலைக்குடம்படுதல், வரையினின்றும் பாய்தல், மாடத்துக்கண்ணிருத்தல் என்பன-கள்ளுண்டல், வாள்வெட்டல், கொலையுடம்படுதல், வரைபாய்தல், மாடத்திருத்தல் எனத் தொகும்.

அஃதேல், இவ்வாறு வருவன உருபு தொகை என அடங்காவோவெனின், ஆண்டு அவ்வேற்றுமைகட்கு ஓதிய வாய்பாட்டால், தொழிலோடும், பெயரோடும் முடிவுழி, உருபு மாத்திரம் தொக்கு இரண்டு சொல்லாகி நிற்கும்; ஈண்டு ஒரு சொல்லாகிவரும், ஆறாவதன்கண் வரும் தொகை உருபு தொகையும், பொருட்டொகையும் என வேறுபாடின்றால் எனின், ஆண்டும் வேறுபாடு உள. மரக்கோடு என்றவழி ஒட்டுப்பட்டுப் பொருட்டொகையாகி நின்றது. மரத்தின் கோடு என்றவழி, உருபு தொகையாகி இரண்டு சொல்லாகி நின்றது. இவை சொல்நோக்கான் உணர்க. “வேற்றுமைத் தொகையே வேற்றுமையியல” என்றதனான் அவ்வேற்றுமை மொழிமாறி நிற்கு மாகலின், அத்தொகைச்சொல் மொழி மாறி நின்று ஒட்டுப்படுதலுங் கொள்க. மலையதிடை, மலையதகம் என்பன இடைமலை; அகமலை எனவும் வரும். பிறவும் அன்ன.

அஃது அற்றாக. 1உலக முவப்ப,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,..................வாணுதல் கணவன் என்பது பல சொல்லாகி வந்து கணவன் என்பதனோடு முடிந்து கிடத்தலான், இரண்டு சொல் ஒரு தொகையாம் என்றல் பொருந்தாதால் எனின்,


1. திருமுருகாற்றுப்படை (1-6).