உரிச்சொல் ஈறுதிரிந்து நின்றது. மதனை என்னும் ஐகாரம் தொக்கு நின்றது. 1நோன்மை-பொறை. திருவடி யடைவார் பலராதலின், அவரெல்லாரையும் பொறுக்க வல்ல தாளென்னும் பொருண்மைத்தாகி, நோன்றாளென வேற்றுமைத் தொகை யாகி ஒருசொன்னீர்மைப்பட்டது. அது மதனுடை நோன்றாள் என அடையடுத்து உறுநர்த்தாங்கிய என்னும் பெயரெச்சத்திற்கு முடிபாயிற்று. செறுநரை என்பது செறுநர் என உருபு தொக்கு நின்றது. தேய்த்த என்பது பெயரெச்சம். அதற்குச் செறுநர் என்பது அடையாகி நின்றது. 2செல் என்பது மழை. ளுஉறழ்தல் என்பது ஒத்தல். அது தடக்கை என்பதற்கு உவம நிலையின் அடையாகி நின்று, செல்லுறழ் தடக்கையென்று ஒரு சொன்னீர்மைப்பட்டது. அது தேய்த்த என்னும் பெயரெச்சத்திற்கு முடிபாயிற்று. மறு என்பது குற்றம், இல் என்பது இல்லாமை, குற்றமில் கற்பெனக் கற்பிற்கு அடையாயிற்று. வாள் என்பது ஒளி. அது ஒளி நுதல் என அடையடுத்து நின்று சினையிற்கூறு முதலறி கிளவி யாகி அதனை யுடை யாட்குப் பெயராகி நின்றது. அது மறுவில் கற்பின் வாணுதல் எனப் பண்புத் தொகையாகி ஒரு சொன்னடையாயிற்று. அது கணவன் என்னும் பெயரோடு கிழமைப் பொருட்டாகிய ஆறாம் வேற்றுமைத் தொகையாகி, மறுவில் கற்பின் வாணுதல் கணவன் என இரண்டாம் வேற்றுமைத் தொகையாகிய ஒரு பெயராயிற்று. அது செல்லுறழ் தடக்கைக் கணவனென இரண்டாம் வேற்றுமைத் தொகையாகி ஒருசொன்னீர்மைப்பட்டது, அது மதனுடை நோற்றாள் என்பதனோடும் அவ்வாறே ஒட்டி நோன்றாட்டடக்கைக் கணவன் என ஒருசொன்னடை யாயிற்று. அது சேண்விளங் கவிரொளி என்பதனோடும் அவ்வாறே யொட்டிச் சேண் விளங் கவிரொளி நோன்றாட்டடக்கைக் கணவன் என ஒருசொன்னடையாயிற்று. இவ்வாறே சொன்னிலையுணர இரண்டு சொல்லே தொகையாகியவாறு கண்டுகொள்க. 3எல்லாத் தொகையும் ஒருசொன்னடைய, என்றோதினமையானும் ஆசிரியன் கருத்திதுவென்று கொள்க. (16) உவமத்தொகை 409. | உவமத் தொகையே உவம வியல. |
உவமைத்தொகை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். ளுஉவம இயல்புடையன உவமத் தொகையாம்,. எ - று. உவமையாவது தொழிலான் ஆதல், பயனான் ஆதல், வடிவினான் ஆதல், வண்ணத்தினான் ஆதல் இதுபோலும் இது என ஒன்றோடொன்று உவமை கூற வருவது. அவ்வுவமையும், உவமிக்கப்படும் பொருளும் விட்டிசைத்து நில்லாது செறிய நிற்பது உவமைத் தொகையாம், எ - று. புலியன்ன பாய்த்துள், மழையன்ன வண்கை, துடியன்ன இடை, பொன்னன்னமேனி என்பன புலிப்பாய்த்துள், மழை வண்கை, துடியிடை, பொன்மேனி எனவரும், பிறவும் அன்ன.
1. நோன்றாள்-வலியினை யுடைய தாள், (நச்). 2. மேகம் (வேறுரை) இடி (நச்). 3. தொல். எச். சூத். 23.
|