(11) 400 ஆம் நூற்பாவில் பிறரெல்லாம் ‘மொழிபுணர் இயல்பே’ எனப் பாடங்கொள்ள, இவர் மட்டும் ‘பொருள் புணர் இயல்பே’ எனப் பாடங்கொள்கின்றார். (12) 411 ஆம் நூற்பாவில் பிறரெல்லாம் ‘அளவில் சுவையினென்று எனப் பாடங்கொள்ள, இவர்மட்டும் ‘சுவையின்’ எனப் பாடங் கொள்கின்றார். (13) 441 ஆம் நூற்பாவில் பிறரெல்லாம் ‘அந்நிலை மரபின்’ எனப் பாடங்கொள்ள, இவர் மட்டும் ‘முன்னிலை மரபின்’ எனப் பாடங்கொள்கின்றார். (உ) உரை வேறுபாடு :- இவ்வுரையாசிரியர் பிறர் உரையினின்றும் முற்றிலும் வேறுபட உரைகொள்ளும் நூற்பாக்களும் உள; நூற்பாவில் ஒரு மருங்கு பிறரோடு ஒத்தும், ஒருமருங்கு தனித்தும் உரை கொள்ளும் நூற்பாக்களும் உள. தொல்காப்பிய உரைகளை ஒத்து நோக்கி ஆராய்வார்க்கு இவ்வாய்வு பெரிதும் பயன் தரும் ஆதலின் அவற்றையும் ஈண்டுக் குறித்தல் தகும். (i) பிறர் உரையினின்றும் முற்றிலும் வேறுபட உரை கொள்ளும் இடங்கள் - 21, 48, 54, 58, 60, 62, 67, 69, 89, 94, 99, 100, 103, 112, 125, 157, 190, 191, 203, 234, 236, 287, 289, 424, 425, 426, 427, 428, 429, 431, 434, 435, 439, 442, 448, 445, 446 ஆகிய நூற்பாக்களைக் காண்க. (ii) ஒரு சிறிது வேறுபடும் இடங்கள் :- 22, 57, 68, 101, 111, 161, 243, 247, 249, 267, 441 ஆகிய நூற்பாக்களைக் காண்க. 8. பதிப்புநலன் இத் தெய்வச்சிலையார் உரை முதன் முதலாகக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துச் சார்பில் கரந்தைக் கவியரசு திருவாளர் வேங்கடா சலம் பிள்ளையவர்களால் பதிப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு முதலில் ஓர் ஏடு கிடைக்க அதுகொண்டே நூல் முழுதும் பதிப்பித்துவிட்டார்கள். பின் ஓர் ஏடும் கிடைக்க, அவ்வேட்டில் கண்ட வேறுபாடுகளை யெல்லாம் பிற்சேர்க்கையாகச் சேர்த்துப் பதிப்பித்துள்ளார்கள். பிற் சேர்க்கையாகச் சேர்க்கப்பட்ட பகுதியே முன் பதிப்பிக்கப்பட்ட பகுதிகளுக்குப் பல்வேறிடங்களில் திருத்தம் பெற உதவியாயிற்று. இவ்வுரையை முதன்முதல் பதிப்பித்துத் தந்துதவிய கரந்தைத் தமிழ்ச் சங்கத்தாருக்கும்; அச்சங்கத்தாரின் வேண்டுகோளை ஏற்று நன்கு பதிப்பித்துத் தந்த கரந்தைக் கவியரசு திரு. R. வேங்கடாசலம் பிள்ளை அவர்களுக்கும் தமிழகம் என்றென்றும்
|