222தொல்காப்பியம்[எச்சவியல்]

222

அஃதேல், முற்றென்பதொன்றில்லையால், முற்றும் எச்சப்பொருண்மைத்தாக வருதலின்? எனின், அஃதாமிடனுமாகாதவிடனும் அறிதல் வேண்டுமென்பது வருகின்ற சூத்திரத்தான் விளங்கும். 1“உரற்கால்யானை யொடித்துண் டெஞ்சிய - வாய்வரி நீழற் றுஞ்சும்” என்றவழி உண்டென்பது வினைமுதல் வினையொடு முடியாமையின், உண்ணாவெனத் திரித்தல் வேண்டிற்று. இந்நிகரன ஈறுதிரிந்தன. மருந்துண்டு நோய்தீர்ந்தான், மழை பெய்ய மரங்குழைத்து என்பனவற்றைப் பிரித்துநோக்க, மருந்துண்டலான், மழைபெய்தலான் என வேற்றுமைப்பொருள்பட்டன.

அஃதேல், இவை வேற்றுமை மயங்கியலுட் கூறப்பட்டன வன்றோவெனின், ஆண்டு வேற்றுமைப்பொருள் வினைச்சொல்லானும் விளங்குமென அதன் இலக்கணங்கூறினார். ஈண்டு வினையெச்சம் வேற்றுமைப்பொருள்படுமென்று இதன் இலக்கணங் கூறினாரென்க. வினையெஞ்சு கிளவியுமென்ற உம்மை இறந்தது தழீஇயிற்று.

(55)

மேலதற்கோர் புறனடை

448.உரையிடத் தியலும் உடனிலை யறிதல்.

மேலதற்கோர் புறனடை யுணர்த்துத னுதலிற்று

இ - ள். உரையென்பது தொடர்மொழி. முற்றுச்சொல் எச்சமாகி வருதலும், வினையெச்சமீறுதிரிதலும், தொடர்மொழிக் கண் முடிக்கும் சொல்லொடு கூடிநின்ற நிலைமையை யறிந்து கொள்க, எ - று.

“மோயின ளுயிர்த்தகாலை” என்றவழி, உயிர்த்தலென்னும் வினையொடு நிற்றலின் மோயினளென்ப தெச்சமாயிற்று. அல்லாதவழி முற்றாயே நிற்கும். ஞாயிறு பட்டுவந்தான் என்றவழி, வந்தான் என்பதற்குப் பட்டென்பதில்லாமையிற் பட எனத் திரித்தல் வேண்டிற்று. பிறவு மன்ன.

(56)

குறிப்பில் பொருள் தருவன

449.முன்னத்தி னுணருங் கிளவியு முளவே
இன்ன வென்னுஞ் சொன்முறை யான.

மனக்கருத்தினாற் பொருளுணருமிட முணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். சொல்லினானன்றி இத்தன்மையவென்னுஞ் சொல்லினது தொடர்ச்சிக்கண் மனக்குறிப்பினாற் பொருளுணரப்படும் சொல்லும் உள, எ - று.

உம்மை இறந்தது தழீஇய எச்சவும்மை. 2”தொடி நோக்கி மென்றோளு நோக்கி அடிநோக்கி, யஃதாண்டவள்செய் தது” என்றவழி, இருப்போமாயின், வளை கழன்று தோள்மெலியுமெனக் கருதி, நடக்க வல்லீராகல் வேண்டுமென அடியை நோக்கினாளாதலான், உடன்போதற்


1. குறுந். 232.

2. குறள். 1279.