போற்றலாவது :- பெரும்பாணாற்றுள், “புல்லென்யாக்கைப் புலவுவாய்ப்பாண” (22) என அண்மைவிளியேற்று முன்னிலைகுறித்து நின்ற ஒருமைப்பெயர் “நீயிரும் பல்வேற்றிரையற் படர்குவிராயின்” (37) எனப் பன்மை யொடு முடிந்தது. கூத்தராற்றுப்படையுள், “கலம்பெறு கண்ணுள ரொக்கற் றலைவ” (50) என அண்மைவிளியேற்று முன்னிலை குறித்து நின்ற ஒருமைப் பெயர் “நீயிரும் நன்னற்படர்ந்த கொள்கை யொடு, உள்ளினிர் சேறீராயின்” (65) எனப் பன்மையொடு முடிந்தது. இவ்வாறு வருங்காற் கூத்தரும் பாணரும் விறலியருமாகி யாண்டுச் செல்வார் பலராயுழியே வரப்பெறுவதென்றும்; தனியொருவனாயின் மயங்கப்பெறாதென்றுங் கொள்க. இனி, ஆற்றுப்படை யல்லாதவழிப் பலரில் வழியும் மயங்கப்பெறும். | “குறிப்பேவல் செயன்மாலைக் கொளநடை யந்தணிர் வெவ்விடைச் செலன்மாலை யொழுக்கத்தீ ரிவ்விடை என்மக ளொருத்தியும் பிறண்மக னொருவனும் தம்முளே புணர்ந்த தாமறி புணர்ச்சியர் அன்னா ரிருவரைக் காணிரோ பெரும!” | | (கலித்-9) எனவும், | | “மறப்பரு காத லிவளீண் டொழிய இறப்பத் துணிந்தனிர் கேண்மின் மற்றைய” | | (கலித்-2) எனவும்,
| | “என்னீர் அறியாதீர் போல இவைகூறல் நின்னீர வல்ல நெடுந்தகாய்” பிறவுமன்ன. | | (கலித்-6) எனவும் வரும்.
|
(60) அதிகாரப்புறனடை 453. | செய்யுண் மருங்கினும் வழக்கியன் மருங்கினும் மெய்பெறக் கிளந்த கிளவி யெல்லாம் பல்வேறு செய்தியி னூனெறி பிழையாது சொல்வரைந் தறியப் பிரித்தனர் காட்டல். |
இவ்வதிகாரத்துளோதப்பட்ட எல்லாச் சொற்கும் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று. இ - ள். செய்யுளிடத்தும் வழக்கிடத்தும் பொருளுணரச் சொல்லப்பட்ட சொற்களெல்லாம் ஈண்டு ஓதிய இலக்கணத்தான் முற்றுப்பெற்றிலவாயினும், பலவகைப்பட்ட ஆசிரியமத விகற்பத்தான் வருமிலக்கணத்திற் பிழையாமல் யாதானுமொரு சொல்லாயினும் பாகுபடுத்துணருமாறு வகுத்துக்காட்டி யுணர்த்துக, நூலுணர்ந்தோர். எ - று. பிறநூன் முடிபினான் முடியினும் இலக்கணப் பிழைப்பின்றாம், எ - று.
|