[எச்சவியல்]சொல்லதிகாரம் தெய்வச்சிலையார்225

225
“கொடுங்கோற் கோவலர் பின்னின் றுய்த்தர’
இன்னே வருகுவர் தாயர்”

(முல்லைப்பாட்டு 15, 16)

என்றவழி ஒன்றனைக் கூறும் பன்மைக்கிளவியி னடங்காமையின் இதற்கிலக்கணம் வேறு வேண்டிற்று.

“வளியிடை வழங்கா வானஞ் சூடிய
மண்டிணி கிடக்கைத்”

(புறம். 35).

என்றவழியும் நெடிய வலிய ஆளெனவும் பெயரெச்சம் அடுக்கி வந்தது.

“நெல்லரியு மிருந்தொழுவர்”

(புறம்-24)

என்னும் புறப்பாட்டு முற்றுப்பெற் றடுக்கிவந்தது.

“ஒன்னாதார்க் கடந்தடூஉம் உரவுநீர் மாகொன்ற
வென்வேலான் குன்றின்மேல்”

(கலி. 27)

என்ற வழியும் அடுக்கிவந்தது.

வினைத்தொகைப்புறத்தும் உவமத்தொகைப்புறத்தும் பொரு ளொற்றுமைப்படாது அன்மொழித்தொகையாகிச் சான்றோர் செய்யுளகத்துவரின் இச்சூத்திரமிடமாக அமைத்துக்கொள்க.

“நின்ன கண்ணியு மார்மிடைந்தன்றே” என்பது நின்னுடையவென்னும் பொருண்மைக்கண் ஒட்டி, அவ்வாய்பாடு குறித்து நின்றது. பிறவும் எடுத்தோதிய இலக்கணத்து மாறுபட்டு வருவனவுளவேல் இச்சூத்திரத்தா னமைத்துக்கொள்க.

(61)

ஒன்பதாவது எச்சவியல் முற்றும்.

சொல்லதிகாரம் - தெய்வச்சிலையாருரை
முற்றிற்று.