தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் 1. கிளவியாக்கம் திணை இரண்டு 1. | உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே அஃறிணை யென்மனார் அவரல பிறவே ஆயிரு திணையி னிசைக்குமன சொல்லே. |
என்பது சூத்திரம். இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோவெனின், மேற்சொல்லப்பட்ட எழுத்தினா னியன்று பொருளறிவிக்குஞ் சொற்களைப் பாகுபடுத்துதலாற், சொல்லதிகாரம் என்னும் பெயர்த்து, அஃதியாங்ஙனம் உணர்த்தினா ரெனின், சொற்களைப் பொருணிலைமை நோக்கித் தொடர்மொழி, தனிமொழி யென இருவகைப்படுத்து, அத்தொடர்மொழியை அல்வழித் தொடர், வேற்றுமைத்தொடரென இருவகைப்படுத்து, அவ்விருவகைத் தொடரும் செப்பும் வினாவுமாக நிகழ்தலான், அவற்றை வழுவாமற் கூறுதற்காக முற்படச் சொன்னிலைமையாற் பொருளை உயர்திணை யஃறிணையென இருவகைப்படுத்து, அவ்வுயர்திணை யுணர்த்துஞ் சொற்களை ஒருவனை யறியுஞ் சொல், ஒருத்தியை யறியுஞ் சொல், பலரை யறியுஞ் சொல்லென மூவகைப்படுத்து, அஃறிணை யுணர்த்துஞ் சொற்களை ஒன்றனையறியுஞ் சொல்லென இருவகைப்படு(த்த...வவகைப்பட்ட சொல்லும் பெயர்ச்சொல்லும் பெயர்ச்சொற்கண்ணும் வினைச்சொற் கண்ணும் வருதலிற் பெயராற் பாலறியப்படுஞ் சொல்லினாலும்?) அமைக்க வேண்டும் சொற்களை எடுத்தோதி, அதன்பின் வேற்றுமைத் தொடர் கூறுவார் மயங்கா மரபினவாகி வருவன எழுவகை வேற்றுமையுணர்த்தி, அதன்பின் அவ் வேற்றுமைக்கண் மயங்குமாறு உணர்த்தி; அதன் பின் எட்டாவதாகிய விளிவேற்றுமை யுணர்த்தி, அதன்பின் தனிமொழிப் பகுதியாகிய பெயர்ச்சொற் பாகுபாடும், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொற் பாகுபாடும் உணர்த்தி, அதன்பின் சொற்கள் விகாரப்படுமாறும் ஒட்டுமாறும், எஞ்சுமாறும் பிறவும் உணர்த்தினா ரென்க. அவற்றுள், அல்வழித்தொடர் கிளவியாக்கத்துள்ளும், வேற்றுமைத்தொடர் வேற்றுமையோத்துள்ளும், வேற்றுமை மயங்கியல், விளிமர பென்பனவற்றுள்ளும், தனிமொழிப்பகுதியாகிய பெயரிலக்கணம்
|