தெய்வச்சிலையார் விளக்கவுரை237

237
(3)

விளிவேற்றுமையை இறுதியில் வைத்திருப்பினும் அது பெயரது
விகாரமே ஆதலின் அது பெயருள் அடங்கு மாதலானும், அப்
பெயர் வேற்றுமை (எழுவாய் வேற்றுமை) கிளவியாக்கத்தோடு
இயைபு பட்டு நிற்றலானும் அதுவும் பொருந்துமென்பது.

சொற்கள் பொருள்கள்மேலாமாறு உணர்த்தினமையான் கிளவியாக்கமாயிற்று என்பர்
இளம்பூரணர்.

வழுக்களைந்து சொற்களை ஆக்கிக்கொண்டமையால் கிளவியாக்கமாயிற்று என்று கூறும் சேனாவரையரும், நச்சினார்க்கினியரும் இளம்பூரணர் கருத்தை இரண்டாவதாக ஏற்றனர்.

ஆக்கம் என்பதற்கு ஆதல் எனப் பொருள் கொண்டனர் இளம்பூரணர். கிளவி - சொற்கள். ஆக்கம் - பொருள்மேல் ஆதல் என்பது அவர் கருத்து.

சேனாவரையருக்கும், நச்சினார்க்கினியருக்கும் ஆக்கம் என்பது அமைத்துக்கொள்ளுதல் எனப் பொருள்படும். கிளவி-சொற்களை, ஆக்கம் - அமைத்துக்கொள்ளுதல். அதாவது
வழுக்களைந்து அமைத்துக் கொள்ளுதல் என்பதாம்.

ஆனால் தெய்வச்சிலையாரோ ஆக்கம் என்பதற்குத் தொடர்ச்சி எனப் பொருள் கொள்கின்றார். கிளவி - சொற்களது, ஆக்கம் - தொடர்ச்சி, சொற்கள் ஒன்றோடொன்று தொடர்ந்து பொருள் மேலாகும் நிலைமையை விளக்குவது கிளவியாக்கம் என்பது இவர் கருத்து.

கிளவியாக்கம் என்பது சொல்லினது தொடர்ச்சி என்னும் பொருளைக் குறியாது, அங்ஙனம் தொடர்ந்து உணர்த்தும் பொருளைக் குறித்தலின் அன்மொழியாயிற்று. கிளவியது ஆக்கம் என விரித்தலின் ஆறாம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாம்.

உயர்திணை யென்பது வினைத்தொகை என்று கூறுவர் இளம் பூரணரும் நச்சினார்க்கினியரும். தெய்வச்சிலையார் பண்புத் தொகை யென்று கூறி வினைத் தொகையுமாம் என்றார்.

நச்சினார்க்கினியர் பண்புத்தொகை என்ற கருத்தை மறுத்து வினைத்தொகை என்பதே பொருந்தும் என்பர். அவர் உரைவருமாறு:-