காலம் என்னும் மூன்று காலமும் தம்முள்மயங்குதல் காலவழுவாம். எல்லாப் பொருளையும் பயின்ற மரபினாற் கூறாதது மரபு வழுவாம். எ - டு. அவன் உண்டது; திணைவழூஉ. அவன் உண்டனள்: பால்வழூஉ. நீ யுண்டனன்: இடவழூஉ. நாளை உண்டேன்: காலவழூஉ. அவன் மேய்ந்தான்: மரபு வழூஉ. பிறவுமன்ன. திணைவழூஉப் பன்னிரண்டு. பால்வழூஉ எட்டு. இடவழூஉ ஆறு. காலவழூஉ ஆறு. மரபுவழூஉ வரம்பில. (11) பேடி என்பது பெண்பாலா யிசைக்கும் 12. | ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி ஆண்மை யறிசொற் காகிட னின்றே. |
ஐயம் அறுத்தலை நுதலிற்று. இ - ள். மேல், உயர்திணை மருங்கிற் பால்பிரிந் திசைக்கும் (சூ. 4) என்று ஓதப்பட்ட பேடி யென்னும் பெயர்க்கண் நிற்கும் சொல் ஆண்மையறிசொற்கு ஆகும் இடன் இலது, எ - று. எனவே பெண்மையறிசொற்கு ஆகும் என்றவாறாம். எ - டு.பெண்ணவா யாணிழந்த பேடி யணியாளோ--கண்ணவாத் தக்க கலம் (நாலடி, 251) எனவரும். ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி பெண்மை யறிசொற்கு ஆகும் என்னாது, ஆண்மை யறிசொற்கு ஆகுமிடமின்று என எதிர்மறை வாய்பாட்டாற் கூறினமையாற் சிறுபான்மை ஆடூஉ வறிசொல்லால் வருவன உளவேற்கொள்க. இச்சூத்திரம் பெண்மை சுட்டிய என்னுஞ் சூத்திரத்தின் (சூ. 4) பின் வையாது ஈண்டுக் கூறியது என்னை யெனின், பெயரும் வினையும் மயங்காமற் கூறுக என்றாராகலிற் பேடி யென்பது இவ்வாறு சொல்லத் தகும் என இறந்தது காத்து ஈண்டு ஓதப்பட்டது. (12) வினாவிலும் விடையிறுப்பதிலும் வழுவற்க எனல் 13. | செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல் |
இதுவும் வழுப்படாமற் கூறுமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள்.செப்பினையும் வினாவினையும் வழுவாமற் கூறுக, எ-று. உலகத்துப் பொருளுணர்த்துஞ் சொல்லெல்லாம் வினாவுஞ் செப்பும் ஆகிய பொருண்மேல் நிகழ்தலின், அவை வழுவாமற் கூறல்வேண்டும் என்றவாறாயிற்று. எனவே வழு எழுவகையாம் என்பது பெற்றாம். செப்பு வருமாறு:-- அச்செப்பு நான்கு வகைப்படும்: துணிந்து கூறல், கூறிட்டுமொழிதல், வினாவிவிடுத்தல், வாய் வாளாதிருத்தல் என. துணிந்துகூறலாவது, தோன்றியது கெடுமோ என்றவழி, கெடும் என்றல். கூறிட்டு மொழித
|