12தொல்காப்பியம்[கிளவியாக்கம்]

12

செப்பின்கண்ணும் வினாவின்கண்ணும் உறழ்பொருட்கண் வரும்
வழுக்காத்தலை நுதலிற்று.

இ - ள். சினையு முதலுமாகிய பொருளுணர்த்துஞ் சொற்குப் செப்பின்கண்ணும் வினாவின்கண்ணும் உறழப்படும் பொருள் அப்பொருளாகும், எ - று.

துணை யென்பது இணை, முதலென்றதனாற் பண்புந் தொழிலுங் காலமு மிடனும் பொருளுங்கொள்க. சினைபற்றி யுறழ்தல் பெரும் பான்மையாகலான் முற்கூறப்பட்டது. அப்பொருளென்றது அவ்வப்பொருட்கு அவ்வப்பொருளே யுறழப்படுவது, எ - று.

அவை யொருபொருட்கண்ணும் பிறபொருட்கண்ணும் ஒத்தன கொள்ளப்படும்.

அவை வினாவின்கண் வருமாறு -- வலமுலையோ இடமுலையோ பெரிதெனத்தன்பொருட்கண் வந்தது. இவள் முலையோ அவள் முலையோ பெரிதெனப் பிறபொருட்கண் வந்தது. இவை சினை. இந்நிறமோ அந்நிறமோ நல்லது: இது பண்பு. இந்நடையோ அந்நடையோ நல்லது: இது தொழில். 1இன்றோ நாளையோ வாழ்வு: இது காலம், இந்நிலமோ அந்நிலமோ விளைவது: இஃது இடம். இவளோ அவளோ கற்புடையாள்: இது பொருள்.

இனிச் செப்பு வருமாறு:-- இம்முலையின் அம்முலை பெரிதென்றானும், ஒக்கு மென்றானும் வரும். பிறவு மன்ன.

இனி அப் பொருளல்லாப் பிறிது பொருளோடு உறழ்தல் வருகின்ற சூத்திரத்தான் அமைக்கப்படும்.

(16)

செப்பில் உறழ் பொருட்கண் வரும் வழுவமைதி

17.

தகுதியும் வழக்கும் தழீஇயின வொழுகும்
பகுதிக் கிளவி வரைநிலை யிலவே.

மேற்சொல்லப்பட்ட உறழ்பொருட்கண் வரும் வழுவமைத்தல்
நுதலிற்று.

(இ - ள்.) சினை முதலாகிய பொருள்களை அவ்வப்பொருளோடு உறழ்தலே யன்றித் தகுதியையும் வழக்கினையுந் தழுவினவாய் நடக்கும் ஒரு கூற்றுச்சொல் விலக்கும் நிலைமையில, எ-று.

சினைமுதற்கிளவியும், உறழ்பொருளும் அதிகாரத்தான் வந்தன.

தகுதியாவது இதற்கிது தகுமோவெனப் பண்பினானாதல் தொழிலினாதல் உறழநிற்பது, வழக்காவது ஒப்புமையின்றி உலகத்தார் பயில வழங்கப்படுவது.

அவற்றுள் தகுதிபற்றி வந்த வினா:-- இந்நங்கை கண் நல்லவோ இக்கயல் நல்லவோ என வருவது: இது பண்பு. இம்முகிலோ இவன் கையோ கொடுக்க வல்லது: இது தொழில்.


1. நெருநலோ இன்றோ நல்லது: இது காலம். (இ. ஏ.)