[கிளவியாக்கம்]சொல்லதிகாரம் தெய்வச்சிலையார்25

25

அவனும் அவன் படைக்கலமும் சாலும் என ஏனையிடத்தும் வருமால் எனின், முன்னிலைவினை இருதிணைக்கும் பொதுவாகலினானும், படர்க்கை வினைக்கட் ‘செய்யும்’ என்னும் முற்றுச் சொல் இருதிணைக்கும் பொதுவாய் வருதலானும் அவை ஆண்டு அடங்குமென்க.

(41)

ஒருவன் ஒருத்தி பற்றிய மரபு

42.

ஒருமை யெண்ணின் பொதுப்பிரி பாற்சொல்
ஒருமைக் கல்லது எண்ணுமுறை நில்லாது.

உயர்திணைப் பொருண்மேல் எண்ணுமுறை நிகழுமாறு உணர்த்துதல்
நுதலிற்று.

இ - ள்.ஒருமை யெண்ணின் பொதுமையாகிய ஒருவர் என்னும் சொல்லினின்றும் பிரிந்த ஒருவன், ஒருத்தியென்னுஞ் சொல் அவ்வொருமைக் கல்லது எண்ணு முறைக்கண் ணோடாது, எ - று.

எனவே, எண்ணுமுறைக்கண் ஆண்பாலாயினும் பெண்பாலாயினும் ஒருவர், இருவர் மூவர் என எண்ணினல்லது பால்தோன்ற எண்ணப் படாது என்றவாறாம்.

(42)

வியங்கோள் எண்ணுப்பெயர்

43.

வியங்கோள் எண்ணுப்பெயர் திணைவிரவு வரையார்.

ஐயமறுத்தலை நுதலிற்று

என்னை? வினையியலுள் வியங்கோள் இருதிணைக்கும் பொது என்றாராயினும், எண்ணுங்கால் தனித்தனி எண்ணல் வேண்டுமோ, விரவி எண்ணல் வேண்டுமோ என்ன நின்ற ஐயம் நீக்குதலின். இது திணை வழு வமைதியுமாம்.

இ - ள்.வியங்கொள்ளும் எண்ணுப் பெயர் திணை விரவுதல் நீக்கார், எ - று

எ - டு. ஆவும் ஆயனுஞ் செல்க எனவரும்.

(43)

வேறு வினைப்பொதுச்சொல் முடியுமாறு

44.

வேறுவினைப் பொதுச்சொல் 1ஒருவினை கிளவார்.

மரபு வழுக்காத்தலை நுதலிற்று.

இ - ள். பல வினையை யுடைய பொதுப் பெயரை ஒரு வினையாற் கூறார் அறிவோர், எ - று. எனவே, பொதுவினையாற் கிளத்தல் வேண்டும், எ - று.

அது, இயம் என்பது கொட்டுவனவும் எறிவனவும் ஊதுவனவும் ஆம். அதனை இயம் கொட்டினார், ஊதினார், எறிந்தார் என்னற்க;


1. ஒரூஉ வினைகிளவார் என்பதும் பாடம் (இளம்பூரணர் உரை)