40தொல்காப்பியம்[வேற்றுமையியல்]

40
‘மற்றுச்சொ னோக்கா மரபின அனைத்தும்
முற்றிநிற்பது முற்றியன் மொழியே’

என அகத்தியனார் ஓதுதலானும், மொழிமாறுதல் இலக்கணமாக எச்சவியலுள் ஓதுகின்றமையானும் அது சொல்லறியாதார் உரையென்க.

(4)

தொகைப் பெயரும் பயனிலை கொள்ளல்

65.பெயரி னாகிய தொகையுமா ருளவே
அவ்வு முரிய அப்பா லான.

 எய்தியதன் மேற் சிறப்புவிதி வகுத்தலை நுதலிற்று.

இ - ள். பெயரான் ஆகிய தொகைச் சொல்லும் உள அவையும் எழுவாயாகிப் பயனிலை கோடற்கு உரிய, எ - று.

1பல் பொருட் கேற்பின் நல்லது கோடல் என்பதனால் பல பொருள் குறித்த பெயரே கொள்ளப்படும். உம்மை இறந்தது தழீஇய எச்சவும்மை.

எ - டு. யானை குதிரை உள; செல்க; வந்தன; கரிய; யாண்டைய; பல-என வரும்.

அஃதேல், பலபொருள் குறித்து வருதல் வேண்டுமென்ற தென்னை? ஒரு பொருட்கண் வரும் பெயரும் தொகையாகாதோ எனின், தொகையாம் ஆயினும், இறுதிக்கண் நின்ற பெயர் பயனிலைகொண்டும் ஏனைய பெயர் பயனிலை ஏலாதும் நிற்கும். இவை இரண்டு பெயர் மேலும் பயனிலை ஒத்துவருதலின் வேறோதப்பட்டன.

(5)

எழுவாய் புலப்பட்டும் புலப்படாதும் நிற்றல்

66.எவ்வயிற் பெயரும் வெளிப்படத் தோன்றி
அவ்விய னிலையல் செவ்வி தென்ப.

 இது எழுவாய் வேற்றுமைக்கு உரியதோர் புறநடை
உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். மூன்றிடத்துப் பெயரும் வெளிப்படத் தோன்றி, பயனிலையோடு நிற்றல் செவ்விது, எ - று.

எனவே, வெளிப்படத் தோன்றாது பயனிலை கோடல் செவ்விது அன்று என்றவாறாம்.

அவையாவன ;-(1) ‘சோறு உண்ணாயோ சாத்தா’ என்ற வழி ‘உண்பல்’ என்பது. இச் செப்பின்கண் ‘யான் உண்பல்’ என எழுவாயும் பயனிலையுமாக நிற்கற்பாலது ‘உண்பல்’ என்னும் பயனிலை வெளிப்பட்டு ‘யான்’ என்னும் பெயர் தோன்றாது நிற்பினும். அப்பொருள்பட நிற்றலின் அத்தொடர் வழு எனப் படாமையால் வெவ்விதன்று ஆயிற்று. இஃது இத்தொடர்ச்சிக்கண் வழுவமைத்தவாறு. இது தன்மை.


1. இஃது ஏற்புழிக் கோடல் எனவும் கூறப்படும்.