அன்ன பிறவும் என்றதனால், இசையைப் பாடும், பகைவரைப் பணிக்கும் எனவும், குழையையுடையவன், வலியையுடையன், கல்வியையுடையன், காவலையுடையன் எனவும் ஆறாம் வேற்றுமைப் பொருள் மொழிமாற்றாகி வருவனவும் கொள்க. பிறவும் அன்ன. அம்முதற் பொருள என்ன கிளவியும் என்றதனால், செயப்படு பொருளே யன்றி 1அதற்குக் காரணமாகிய பொருள் மேலும் பொருளினது உறுப்பின்மேலும் வருவனவும் கொள்க. மண்ணை வனைந்தான், நூலைநெய்தான், இவை காரணம்.விளிம்பை நெய்தான்--உறுப்பு. சுவரை யெழுதினான்--இடம். பிறவும் அன்ன. (10) மூன்றாம் வேற்றுமை 71, | 2மூன்றா குவதே, ஒடுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி வினைமுதல் கருவி யனைமுதற் றதுவே. |
மூன்றாம் வேற்றுமையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். மூன்றாம் வேற்றுமையாவது ஒடுவெனப் பெயர் பெற்ற வேற்றுமைச்சொல். அது வினைமுதலுங் கருவியுமாகிய அவ்விரண்டு காரகத்தையும் உடைத்து, எ-று. ஈண்டு, முதல் என்பது காரகம், கருத்தாவின் கண்ணும், கருவியின் கண்ணும் வரும், எ-று. கொடியொடு தொடக்குண்டான், இது வினைமுதல், “ஊசியொடு குயின்ற தூசும் பட்டும்”--இது கருவி. (11) மூன்றாவதன் பொருள் பற்றிய பாகுபாடுகள் 72. | அதனி னியறல் அதற்றகு கிளவி அதன்வினைப் படுதல் அதனி னாதல் அதனிற் கோடல் அதனொடு மயங்கல் அதனோ டியைந்த ஒருவினைக் கிளவி அதனோ டியைந்த வேறுவினைக் கிளவி அதனோ டியைந்த வொப்பல் ஒப்புரை இன்னா னேது ஈங்கென வரூஉம் அன்ன பிறவும் அதன்பால என்மனார். |
இதுவும் மூன்றாம் வேற்றுமைக்குரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். அதனினியறன் முதலாக ஒப்பல் ஒப்புரை ஈறாக எடுத்தோதப்பட்ட சொல்லினான் வரும் பொருண்மையும். இன்
1. ‘பொருளினது உறுப்பின் மேலும், பொருள் நிகழும் இடத்தின் மேலும் வருவன கொள்க’ என்பதும் பாடம். 2. இதனையும் அடுத்த நூற்பாவையும் ஒரே நூற்பாவாகக் கொள்வர் இளம்பூரணர்.
|