“கணிகொண் டலர்ந்த நறவேங்கையோடுங் கமழ்கின்ற காந்தளிதழா லணிகொண்ட” | (சூளா. அரசியல், 197) |
என்புழி ஓடு வந்தது. ஆன் வந்தவழி யெல்லாம் ஆல் வருதல் வழக்கினிற் கண்டு கொள்க. (12) நான்காம் வேற்றுமை 73. | 1நான்கா குவதே, குஎனப் பெயரிய வேற்றுமைக் கிளவி எப்பொரு ளாயினுங் கொள்ளு மதுவே. |
நான்காம் வேற்றுமையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். நான்காம் வேற்றுமையாவது கு எனப் பெயர்பெற்ற வேற்றுமைச்சொல். அது யாதானுமொரு பொருளாயினும் ஏற்று நிற்கும் நிலைமைத்து. எனவே, ஏற்கும் பொருண்மைக்கண் வரும், எ - று. அந்தணர்க்குக் கொடுத்தான் எனவரும். (13) நான்காவதன் பொருள்பற்றி வரும் வேறுபாடு 74. | அதற்குவினை யுடைமையின் அதற்குடம் படுதலின் அதற்குப் படுபொருளின் அதுவாகு கிளவியின் அதற்கியாப் புடைமையின் அதற்பொருட் டாகலின் நட்பின் பகையின் காதலின் சிறப்பினென் றப்பொருட் கிளவியும் அதன்பால வென்மனார். |
இதுவும் நான்காம் வேற்றுமைக்கண் வரும் பொருள் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். அதற்கு வினையுடைமை முதலாகச் சிறப்பீறாகச் சொல்லப்பட்டவற்றின்கண் அப்பொருள்பட வருஞ் சொல்லும், உம்மையால் அந்நிகரன பிறபொருட்கண் வருஞ் சொல்லும் நான்காம் வேற்றுமைப்பாலன, எ - று. உம்மை எச்சவும்மை. அதற்கு வினையுடைமையின் என்பது மேற்சொல்லப்பட்ட கொடைப் பொருண்மையே யன்றி உருபேற்கும் பொருட்கு வினையாதலுடைமை கூறும் வழியும் நான்காம் வேற்றுமைப் பாலனவாம், எ - று. எ - டு. அவர்க்குப் போக்குண்டு, அவர்க்கு வரவுண்டு, இவை வினை. கரும்பிற்குழுதான் என்பதுமது.
1. இதனையும் அடுத்த நூற்பாவையும் ஒரே நூற்பாவாகக் கொள்வர் இளம்பூரணர்.
|