இதனிற் சிறந்தது, இதனின் இழிந்தது, இதனிற் புதிது, இதனிற் பழைது, இதனின் ஆக்கம், இவனின் இலன், இவனின் உடையன், இதனின் நாறும், இதனிற்றீரும், இவரிற் பலர் இவர், இவற்றிற் சில ஏறும், இதனிற் பற்றுவிடும். அன்ன பிறவும் என்றதனான், இவனிற் காக்கும். இவனிற் பண்ணும், இவனிற் பாடும் என வருவன கொள்க. இவற்றுட் பெரிதென்பது மிகுதி குறித்து நின்றது. சிறிதென்பது குறைவு குறித்து நின்றது. ஏனையவும் இவ்வாறு நோக்கிக் கொள்க. இவையெல்லாம் ஒப்புக்குறித்துழி உவமையாம், ஏதுக்குறித்துழிக் கரிதாயிற்று, வட்டமாயிற்று என உதாரணங்காட்ட உருபேற்ற பொருளெல்லாம் ஏதுவாம். (16) ஆறாம் வேற்றுமை 77. | 1ஆறா குவதே, அதுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி தன்னினும் பிறிதினும் இதன திதுவெனும் அன்ன கிளவிக் கிழமைத் ததுவே. |
ஆறாம் வேற்றுமை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். ஆறாம் வேற்றுமையாவது அதுவெனப் பெயர்பெற்ற வேற்றுமைச்சொல். அது தன்னினானும் பிறிதினானும் இதனது இது என வரும் பெற்றிப்பட்ட பொருட் கிழமையை யுடைத்து, எ-று. தன் என்றது உடையானை. பிறிதென்றது உடைப்பொருளை. ஈண்டுக் கிளவி என்பது பொருள். கிளக்கப்படுவது கிளவியாயிற்று. கிழமை என்பது உரிமை, தன்னோடும் பொருளோடும் உள்ள உரிமையுணர வரும் ஆறாவதென்றவாறு. அதுவென்பது ஒருமையுணர்த்தும் சொல்லாகலின், வந்தது கொண்டு வராதது முடித்தல் என்பதனால், பன்மையுணர்த்தும் அகர உருபுங் கொள்க. எ - டு. சாத்தனது குழை, சாத்தனகுழைகள், உலகத்துக்குழையுடையாரும் பலர், குழையும் பல, ஆயினும், இக்குழை இவனதென்னும் உரிமை தோன்ற வந்தவாறு கண்டுகொள்க. (17) ஆறாவதன் பொருள் பற்றிய வேறுபாடு 78. | இயற்கையி னுடைமையின் முறைமையின் கிழமையின் செயற்கையின் முதுமையின் வினையின் என்றா கருவியின் றுணையின் கலத்தின் முதலின் ஒருவழி யுறுப்பின் குழுவின் என்றா |
1. இதனையும் அடுத்த நூற்பாவினையும் ஒரே நூற்பாவாகக் கொள்வர் இளம்பூரணர்.
|