கருவி என்பது உடைமை குறியாது இதற்கிது கருவி யென்னும் பொருள்பட வருவது. யானையது தோட்டி, வனைகலத்தது திகிரி. துணை யென்பது நட்பின் மேல்வரும், சாத்தனது துணை இது. வந்தது கொண்டு வராதது முடித்தல் என்பதனால் பகையும் கொள்க. சாத்தனது பகை. மாறுபாடும் இனம் ஆகுமோ எனின், மாறுபாடும் அப்பொருள் குறித்தலின் இனமாம். கலம் என்பது பாலது கலம், நிலத்தது விலைக்கலம். முதலென்பது சினையோடு அடுத்து முதலுணர வருவது. கொடியது முதல். ஒருவழியுறுப்பு என்பது முதலோடு சினையடுத்து வருவது. சண்பகத்தது கோடு. குழாமென்பது பலபொருட்டொகுதி. படையது குழாம், நெல்லது குப்பை. தெரிந்து மொழிச்செய்தியாவது தெரிந்த மொழியினது செயல் கூறல். பாட்டது கருத்து, பாட்டது பொருள். நிலை என்பது அவரவர் நின்ற நிலைமை குறித்து வருவது, சாத்தனது இல்வாழ்க்கை, சாத்தனது தவம். வாழ்ச்சி என்பது இடம் பற்றிவரும். யானையது காடு, காட்டது யானை. திரிந்து வேறு படுவன, எண்ணது சாந்து, கோட்டது நூறு. கூறிய மருங்கிற்றோன்றுவன, சாத்தனது தோப்பு, பொருளது கேடு, ஆவினது பால், கரும்பினது சாறு என இந்நிகரன வெல்லாம் கொள்க. இன்னுங் கூறிய மருங்கிற்றோன்றுங் கிளவி என்பதனால், உருபின் பொருள்படவரும் உடைய வென்னுஞ் சொல்லுங் கொள்க. (18) ஏழாம் வேற்றுமை 79. | 1ஏழா குவதே, கண்ணெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி வினைசெய் யிடத்தின் நிலத்தின் காலத்தின் அனைவகைக் குறிப்பில் தோன்றும் அதுவே. |
ஏழாம் வேற்றுமை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். ஏழாம் வேற்றுமையாவது கண் எனப் பெயர் பெற்ற வேற்றுமைச் சொல். அது வினை நிகழுமிடத்து நிலத்
1. இதனையும் அடுத்த நூற்பாவினையும் ஒரே நூற்பாவாகக் கொள்வர் இளம்பூரணர்.
|