தினும். காலத்தினும், அவ்விருவகைக் குறிப்பினும் தோன்றும். எ - று. எனவே, தொழில் நிகழாதவழி, நிலமும், காலமும் ஏழாம் வேற்றுமை யாகா என்றவாறாம். எ - டு. அரங்கின்கண் வனைந்தான், மாடத்தின்கண் இருந்தான், இவை நிலம், காலைக்கண் வனைந்தான், மாலைக்கண் வனைந்தான். இவை காலம். போரின்கண் வந்தான் என்றவழி இடங் குறித்தான் ஆயின், பொர நின்றவிடத்து வந்தான் எனவும், காலங் குறித்தானாயின் பொர நின்ற காலத்து வந்தான் எனவும், நிலமும் காலமும் குறித்துக் கொள்ளக்கிடந்தது, ஆலின் கீழ்க் கிடந்தது ஆ, ஆலின்கண் இருந்தது குரங்கு என்றவழி கீழ்க் கிடந்தது ஆ; மேலிருந்தது குரங்கு என இவ்வாறு வரும் இடவேறுபாடுங் குறித்துக்கொள்ளப்படும், பிறவும் அன்ன. இனி அப் பொருண்மைக்கண் உருபு புலப்படாமல் இட வேறுபாடு காட்டுவன சில கண்டு அவற்றை எடுத்தோதுகின்றார் வருகின்ற சூத்திரத்தான். (19) ஏழாவதன் பொருள்பற்றி வரும் வேறுபாடு 80. | கண்கால் புறம் அகம் உள்உழை கீழ்மேல் பின்சார் அயல்புடை தேவகை எனாஅ முன்இடை கடைதலை வலம்இடம் எனாஅ அன்ன பிறவும் அதன்பால என்மனார். | இது ஏழாம் வேற்றுமைப் பொருள் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.இ - ள். கண்முதலாக இடம் ஈறாக ஓதப்பட்டனவும், அத்தன்மைய பிறவும் ஏழாம் வேற்றுமைப் பாலன, எ-று. இவையெல்லாம் பெயரைச் சார்ந்து தனித்தனி வரில் பெயராகி உருபேற்கும், பெயரைச் சாராது இடமும் காலமும் ஆகிய பொதுமை உணரவரின், உருபு மாத்திரமாகி நிற்கும். இடம் வேறுபாடு உணரவரின் உருபு புலப்படாது பொருள் உணரவரும். அகத்தை, அகத்தொடு, புறத்தை, புறத்தொடு என்பன தனித்து உருபேற்றன, அரங்கினுள் அகழ்ந்தான். மாடத்துழை இருந்தான் என்பன உருபாகி நின்றன. இனி இடம் வேறுபாடு காட்டுமாறு;--கண் என்பது இடம். அரசர்கட் சென்றான் என்பது நெறிக்கட் சென்றான் என்றாற்போலச் சேறற்றொழிற்கு அரசன் ஆதாரம் ஆதலின்றி அவனிடத்துச் சென்றான் என உருபு புலப்படாமல் இடம் என்பதோர் பொருள் உணர்த்தியவாறு கண்டு கொள்க. கால்--ஊர்க்கா னிவந்த பொதும்பர். ஊரை யடுத்தல் ஆகிய பொருள் மேல் வந்தது. புறம்--சுவர்ப்புறத்துப் பாவை. பாவைக்கு ஆதாரமாகி நின்றது சுவராயினும் அச்சுவரகத்துப் பாவையின்மையின் புறமென ஒரு பொருள் தோன்ற நின்றது. அகம்--எயிலகத்துப் புக்கான்
|