முதல் சினைக் கிளவி யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். முதல் சினை என்பன பொருளால் நியமம் இல. அவற்றைச் சொல்லுமிடத்துச் சொற்குறிப்பினால் அறியப்படும். எ - று. என்றது:--ஒரு காற் சினையாகி வந்தது தானே ஒரு கால் முதலும் ஆகிவரும் என்றவாறு. எ - டு. கோட்டது நுனியைக் குறைத்தான். கோட்டை நுனிக்கட் குறைத்தான். கோட்டை நுனியைக் குறைத்தான் எனவரும். (5) பிண்டப்பெயரும் அவ்வியல்பினவாதல் 87. | பிண்டப் பெயரும் ஆயியல் திரியா பண்டியல் மருங்கின் மரீஇய மரபே |
பிண்டப்பெயருக்கு உரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். பிண்டப் பெயராவது திரட்சியானாகிய பெயர். அதுவும்-திரட்சியும் திரண்ட பொருளும் பொருளான் வேறுபடா, அவையிற்றைச் சொல்லுந் திறம் பண்டு வழங்கின பக்கத்து மருவிய மரபினவாம். எ - று. எனவே., மேற் சொல்லியவாறு போலச் சொல்லுவான் குறித்த வழியோடு ஆம் என்றவாறாம். எ-று. எ - டு. படையது குழாத்தைக் கெடுத்தான். நெல்லது குப்பையைச் சிதறினான். குப்பையைத் தலைக்கட் சிதறினான். குப்பையைத் தலையைச் சிதறினான். குப்பையது தலையைச் சிதறினான் எனவரும். குழாத்தைத் தலைக்கட் கெடுத்தான் எனவும், படையைக் குழாத்தின் கட் கெடுத்தான் எனவும், நெல்லைக் குப்பையின்கட் சிதறினான் எனவும் வரின். பொருள் ஒற்றுமைப் பட்டுத் தோன்றாமையின் மரீஇய மரபு அன்றாயிற்று. பிறவும் அன்ன. (6) ஒடுச்சொல் வினைக்கண் சிறப்புடைய பொருள்வழி வரும் எனல் 88. | ஒருவினை ஒடுச்சொல் உயர்பின் வழித்தே. |
மூன்றாம் வேற்றுமை உடனிகழ்ச்சிக்கு உரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். இருபொருட்கண் ஒருதலை பற்றிவரும் ஒடுச்சொல் அவ்விரு பொருளினும் உயர்ந்த பொருளின் வழியை உடைத்து. எ-று. வழி என்றது அப்பொருளின் வழியாகிய பொருள் என்று கொள்க. உயர்வு என்பதைச் சிறப்பென்று கொள்க. கொள்ளவே, அத்தொழிற்குச் சிறவாத பொருட்கண் வரும் என்றவாறாம். எ - டு. அமைச்சரோடு இருந்தான் அரசன். இருந்தான் என்னும் தொழிற்குச் சிறந்தான் அரசன் ஆதலின், சிறவாத அமைச்சர் மேல் ஒடு
|